விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கல்நவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின்,*
    நல்நறு வாசம் மற்றுரானும் எய்தாமே,*
    மன்னும் வறுநிலத்து வாளாங்கு குத்ததுபோல்,*
    என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும்,*
    மன்னு மலர்மங்கை மைந்தன்,*  -கணபுரத்து-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கல் நவிலும் காடு அகத்து - கல் மயமான காட்டினுள்ளே
ஓர் வல்லி - ஒரு கொடியில் (புஷ்பித்த)
கடி மலரின் - புதுமலரினுடைய
நல் நறு வாசம் - நல்ல பரிமளம்
மற்று ஆரானும் எய்தாமே - யார்க்கும் உபயோகப் படாமல்

விளக்க உரை

காமன் செய்கிற ஹிம்ஸை ஒருபுறமிருக்கட்டும், என்னோடு கூடவே பிறந்து என்னை ஹிம்ஸிக்கின்ற இம்முலைகளைத் தண்டிப்பாராருமில்லையேயென்கிறாள். ஒருவரும்புகக்கூடாத காட்டிலே சிறந்ததொரு கொடி தன்னிலே பரிமளோத்தரமான புஷ்பம் புஷ்பித்துக் கமழநின்றால் ஆர்க்கு என்ன பயன்? “கோங்கலரும்பொழில் மாலிருஞ்சோலையிற் கொன்றைகள் மேல் தூங்கு பொன் மாலைகளோடுடனாய் நின்று தூங்குகின்றேன்“ (நாச்சியார் திருமொழி) என்றாற் போல, அங்கே புஷ்பித்து அங்கே உதிர்ந்து அங்கே உருமாய்ந்து போகவேண்டியதே அம்மலர்களின் கதி. அதுபோல, எனது தேஹ குணங்களும் ஆத்ம குணங்களும் திருக்கண்ணபுரத்தெம்பெருமானுடைய ஸம்ச்லேஷத்துக்கு உறுப்பாகாவிடில் இவற்றால் என்ன பயன், மேற்சொன்ன மலர்கள் போல இவையும் நிஷ்பலங்கயெ யன்றோ. எம்பெருமானோடு அணையப்பெறாதே வீணாக வளர்ந்து கிடக்கின்ற இம்முலைகள் எப்போதும் கண்ணெதிரே தோன்றி நின்று மார்புக்கும் பாரமாகி வருத்துகின்றனவே! எதுக்கு இவை விம்மி வீங்கு கின்றன? இம்முலைகள் தொலைந்தொழிய மருந்து தருவாருமில்லையே! என வருந்துகின்றாள்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்