விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இட அணரை இடத் தோளொடு சாய்த்து*  இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக்* 
    குடவயிறு பட வாய் கடைகூடக்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது* 
    மட மயில்களொடு மான்பிணை போலே*  மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ* 
    உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி*  ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோவிந்தன் - கண்ணபிரான்;
இட அணஸா - (தனது) இடப்பக்கத்து மோவாய்க்கட்டையை;
இட தோளொடு சாய்ந்து - இடத்தோள் பக்கமாகச் சாய்ந்து;
குடம்பட - குடம் போலக் குமிழ்த்துத் தோற்றவும்;
வாய் - வாயானது;

விளக்க உரை

குழலூதும்போது மோவாய்க்கட்டையின் இடப்பக்கம் இடத்தோள் பக்கமாகத் திரும்புதலும், இரண்டு கையும் குழலோடு கூடுதலும், புருவம் நெரித்தலும், வயிற்றிலே காற்றை நிறைத்து நிறுத்தி, அதனைத் திருப்பவளத்தாலே கிரமமாக விட்டு ஊதவேண்டுகையாலே வயிறு குடம்போலே எடுப்பாகத் தோன்றுதலும், குழலின் துளைகளின் அளவுக்கு ஏற்ப வாய் குவிந்து குமிழ்த்துப் போதலும் இயல்பாமென்க. அணர்-தாடி;அதுக்கு உரிய இடத்திற்கு ஆகு பெயர். கடை கூட-(வாயின்) இரண்டு ஓரங்களும் ஒன்றாய்க்கூட; எனவே, குவிந்து என்றதாயிற்று; கடைவாய்கூட - இரண்டு கடைவாய்களும் ஒன்றோடொன்று கூட. கொடு-கொண்டு என்பதன் சிதைவு. இவ்வாறு கண்ணபிரான் குழலூதுவதைக் கேட்ட இளம்பெண்கள் இருந்த விடத்தில் நின்றே உடல் விகாரமடைந்து மயிர் முடியவிழவும், அரை உடை நெகிழவும் பெற்று “இந்த ஸன்னிவேசத்துடனே நாம் இவ்வாறு வெளிப்புறப்படக்கடவோம்” என்னும் ஸங்கோசமுமற்று நெகிழ்ந்ததுகிலை ஒரு கையாலும், அவிழ்ந்த முடியை ஒரு கையாலும் பற்றிக் கொண்டு மிகுந்த சிரமத்துடனே ஓடிவந்து அக்கண்ணனைக் கண்ணாற காணப்பெற்றனராம். மடமயில் போல மலர்க் கூந்தல் அவிழவும், மான்பிணை போல ஓடரிக்கணோடவும் என்று இயைப்பர். ஒல்குதல்-ஒடுங்குதல் கண்ஓடநிற்றல் - அவனைக்காட்டு, காட்டு என்று கண்கள் விரைந்தோடி நிற்றல். “ஸ்த்ரீத்வம் பின்னாட்டினாறும் ஓடுகிற கண்ணை நிஷேதிக்கப்போமோ” என்ற ஜீயருரை அறியத்தக்கது.

English Translation

When Govinda played his flute, he threw his weight on his left shoulder; his two hands came together; his eyebrows knitted, his belly rose, his mouth closed in. Deer-like and peacock-like maidens,--their flowered coiffure loosening, their dress slipping, their Sarees held with one hand,--stood shyly apart, running their collyrium-lined eyes over him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்