விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இன்னிசை ஓசைக்கு இரங்காதார்,*  மால்விடையின்-

    மன்னும் மணிபுலம்ப வாடாதார்,*  -பெண்ணைமேல்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆயன் வேய் இன் இசை ஓசைக்கு இரங்காதார் - இடையன் ஊதுகிற புல்லாங்குழலின் இனிய கானத்வனியைக் கேட்டுத் தளராதே யிருப்பவர்கள்,
மால் விடையின் மன்னு மணி புலம்பவாடாதார் - (பசுவின் மேலே) வ்யாமோஹித்து வருகிற காளையின் சிறந்த (கழுத்தின்) மணியானது ஒலி செய்ய அதனைக் கேட்டு இரங்காதே யிருப்பவர்கள்,
பெண்ணை மேல் பின்னும் - பனைமரத்தின் மீது ஆணோடே வாயலகு கோத்துக்கொண்டிருக்கிற

விளக்க உரை

ஆயன்வே யின்னிசை யோசைக் கிரங்காதார் –விரஹ காலத்தில் வேய்குழலோசை (வேணுநாதம்) காதிற்பட்டால் உள்ளமுருகிச் சுருண்டு விழுவது முறைமை, அப்படி தளராமல் ‘குழலோசை செவிக்கு இனிதாயிருக்கிறது நல்ல ராகத்தில் வாசிக்கப்படுகிறது. லக்ஷணத்தில் வழுவில்லாமல் ஸல்லக்ஷணமாயிருக்கிறது‘ என்று சொல்லித் தரித்திருப்பவர்கள் அரஸிர்களேயாவர். குழலூதுவது இடையர்க்குச் சாதியியல் வாகையால் ஆயன்வேண் எனப்பட்டது.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்