விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாரார்ந்த மார்வன் தடமால் வரைபோலும்*
    போரானை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றுஅலறி*
    நீரார் மலர்க்கமலம் கொண்டு ஓர் நெடுங்கையால்*
    நாராயணாஓ மணிவண்ணா நாகணையாய்* 
    வாராய் என்ஆர்இடரை நீக்காய்*--எனவெகுண்டு

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தடம் மால் வரை போலும் போர் ஆணை - மிகப்பெரிய மலைபோன்ற மத்தகஜமானது
பொய்கை வாய் கோள்பட்டு நின்று அலறி - நீர்நிலத்திலே முதலையின் வாயிலகப்பட்டு நின்று வருந்தி
ஓர் நெடுகையால் நீர் ஆர் கமலம் மலர் கொண்டு - நீண்ட ஒரு துதிக்கையினால் அப்போதலர்ந்த தாமரைப் பூக்களை எடுத்துக்கொண்டு

விளக்க உரை

பெரியாழ்வார் திருமொழியில் “பதக முதலைவாய்ப்பட்ட களிறு, கதறிக் கைகூப்பி என் கண்ணா கண்ணா வென்ன“ என்ற விடத்து வியாக்கியான மருளிச் செய்கின்ற மணவாளமாமுனிகள் – “நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய் வாராய்“ என்று கூப்பிட்டானாக அருளிச்செய்தார் திருமங்கையாழ்வார், இவர் ‘என் கண்ணா கண்ணா‘ என்று கூப்பிட்டானாக அருளிச்செய்தார், ‘மூலமே‘ என்று கூப்பிட்டானாகப் பௌராணிகர் சொன்னார்கள், இவை, தன்னில் சேரும்படி என்னென்னில், மூலம் என்கிறவிடத்தில் அஸாதாரண விக்ரஹ விசிஷ்டனான ஆகாரத்தை நினைத்துக் கூப்பிட்டானாகையாலே அதுக்குப் பர்யாய சப்தங்களை யிட்டு ஆழ்வார்களருளிச் செய்தார்களாகையால் எல்லாம் தன்னில் சேரக் குறையில்லை“ என்றருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் இங்கே அநுஸந்திக்கத்தகும்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்