விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தீராது என்சிந்தை நோய் தீராது என்பேதுறவு* 
    வாராதுமாமை அதுகண்டு மற்றுஆங்கே*
    ஆரானும் மூதுஅறியும் அம்மனைமார் சொல்லுவார்*
    பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்* 
    ஆரானும் மெய்ப்படுவன் என்றார்* -- அதுகேட்டு

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அதனாலும் என்சிந்தை நோய் தீராது - அப்படி செய்த்தனாலும் எனது  மனோவியாதானது தீர்ந்த்தில்லை,
என் பேதுறவு தீராது - எனது அறிவு தேடும் தீர வில்லை,
மற்று - அதற்குமேல்
ஆங்கே ஆரானும் - அங்கிருந்த யாரோ சில பழம்
மூது அறியும் அம்மனைமார் - பாட்டுகளறிந்த பாட்டிமார்கள்
அது கண்டு - அப்படிப்பட்ட எனது சொல்லத் தொடங்கினர், (என்ன சொன்னார்களென்னில்)

விளக்க உரை

செங்குறிஞ்சித்தாரார் என்ற வாக்கியத்தில், “நறுமாலைச் சாத்தற்கு“ என்ற பாடமோதவேண்டியதை விட்டு “நறுமாலை சாத்தற்கு“ என்று தப்பான பாடம் ஓதிவந்தனராகையால் இவ்வாக்கியத்தின் பொருளை உள்ளபடி அறியாதொழிந்தனர் பலர், ‘சாஸ்தா‘ என்கிற வடசொல் சாத்தான் எனத்திரிந்து கிடக்கிறதென்பதையறியாமல் “செங்குறிஞ்சித்தார்ர் நறுமாலை சாத்திக் கொள்கிறவனுக்கு“ எற கற்றறிந்த பல பெரியார்களும் பொருள் சொல்லக்கேட்டிருக்கிறோம். அங்ஙனன்று, செங்குறிஞ்சித்தாரார் நறுமாலையையுடைய, (சாத்தற்கு) சாஸ்தா என்று ப்ரஸித்தமாக தேவதாந்தரத்திற்கு என்று உண்மைப் பொருள் உணர்க. சாத்தான் –கு-சாத்தற்கு. இவ்வகைப் பொருளில் “மாலைச் சாத்தற்கு“ என்றே பாடமோத வேண்டும். அமரகோசத்தில் ஸர்வஜ்ஞஸ் ஸுகதோ புத்த) என்று தொடங்கி, புத்த தேவதைக்குப் பெயர்கள் படிக்கப்பட்டுள்ளமை காண்க. (தான் பின்னும் நேராதன ஒன்று நேர்ந்தாள்) “மறந்தும் புறந்தொழா மாந்தர்“ என்னுங் குடிப்பிறப்பின் உறைப்பு உள்ளமையால் தேவதாந்தரத்தைத் தொழுதாளென்று சொல்வதற்கும் இத்தலைமகள் அருவருத்து இங்ஙனே மறைத்துச் சொல்லுகிறாள். இதுவரையில் செய்யாத ஒரு காரியத்தைச் செய்தாளென்கிறாள். “வகுத்த விஷயத்திலே ஓர் அஞ்ஜலி பண்ணினான் அது ஸாதநத்தில் அந்வயிக்கில் செய்வதேன்? என்றிருக்கக் கடவதான், திருத்துழாய் பரிமாறாதவொரு தேவதைக்கு ஓர் அஞ்சலியுமகப்படப்பண்ணினாள் போலே காணும்“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி இங்கே அநுஸந்திக்கத் தகும். (மூதறியுமம்மனைமார் சொல்லுவார்) இவ்விடத்திற்குப் பெரிய வாச்சான் பிள்ளை கேட்க, தொண்ணூற்றெட்டு இந்த்ராதிகளை ஸேவித்தேன், இந்த்ரன்படி கேட்கிறாய், வேணுமாகில் சொல்லுகிறேன்‘ என்றாளிறே, அப்படியே பழையராய், நோய்களும்மறிந்து நோய்க்கு நீதாநமுமறிந்து பரிஹாரமும் பண்ணுவித்துப் போரும் மூதறிவாட்டிகள் சொல்லுகிறார்கள்“ – என்று

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்