விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வானத்தில் உள்ளீர்! வலியீர் உள்ளீரேல்*  அறையோ! வந்து வாங்குமின் என்பவன் போல்* 
    ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை*  இடவன் எழ வாங்கி எடுத்த மலை*
    கானக் களி-யானை தன் கொம்பு இழந்து*  கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்துக்* 
    கூனற் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எனத்து உரு ஆகிய - (முன்பு ஒரு காலத்திலே) வராஹரூபம் கொண்டருளின;
ஈசன் - ஸ்வாமியாயும்;
எந்தை - எனக்குத் தந்தையாயுமுள்ள கண்ணபிரான்;
வானத்தில் உள்ளீர் - “மேலுலகத்திலிருப்பவர்களே! (நீங்கள்);
வலியீர் உள்ளீர் எல் - (என்னோடொக்க) வல்லமையுள்ளவர்களாயிருப்பீர்களாகில்;
அறையோ - அறையோ அறை;

விளக்க உரை

கண்ணபிரான் மலையை விடாது வருந்தாது தாங்கிக்கொண்டு நிற்றலை ஒருவகையாக உத்ப்ரேக்ஷிக்கின்றார் - முதலடியினால்; நாம் ஆகாசத்திலே திளைத்தோமென்று இறுமாந்திருப்பவர்களே! நீங்கள் மெய்யே வலிவுள்ளவர்களாகில் இம்மலையைச் சிறிது தாங்குங்கள் பார்ப்போம் என்று தேவர்களை அழைப்பவன் போன்றுள்ளனென்க. அறையோ என்றது - பௌருஷம் தோன்ற மீசை முறுக்கிச் சொல்லும் வெற்றிப்பாசுரம். பாதாள லோகஞ்சென்று சேர்ந்த பூமியை ஒட்டு விடுவித்தெடுத்துத் திருஎயிற்றிலே தாங்கிநின்ற பெருமானுக்கு இம்மலையெடுக்கை அரிதன்றென்பார். “ஏனத்துருவாகியவீசன்” என்றார். இடவன் - மண்கட்டிக்குப் பெயர். பின்னடிகளின் கருத்து; ஒரு யானையானது கரைபொருது திரியும்போது ஓரிடத்திற் கொம்பைக்குத்தின வளவிலே அக்கொம்பு முறியப்பெற்று அவ்விடத்தில் மதநீரொழுகப்பெற்ற ஆற்றாமையாலே துதிக்கையைத் தூக்கிக்கொண்டு, வானத்தில் வளைந்து தோற்றும் இளந்திங்களைத் தானிழந்த கொம்பாக ப்ரமித்து அதனைப் பறித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவலுடன் உயர்முகமாகவேயிருக்கும்படியைச் சொல்லியவாறு. கதுவாய் - குறையுற்ற இடம். அண்ணாத்தல் - மேல் நோக்குதல். இதற்கு உள்ளுறை பொருள்;- ஸம்ஸாரமாகிற மருகாந்தாரத்திலே களித்துத்திரிகிற ஆத்துமா தனது மமகாரமழியப்பெற்று மதமாத்ஸர்யங்களும் மழுங்கப்பெற்று ஸத்துவம் தலையெடுத்து அஞ்சலிபண்ணிக்கொண்டு ப்ரக்ருத்யாத்ம விவேகம் முதலிய ஞானங்களைப் பெறவிரும்பி ????னாயிருக்கும்படியைக் குறித்தவாறாம்: இது மகாரார்த்தமென்க.

English Translation

Lord my master, who had once come as a boar, lifted the mount like an earth-cold and seemed to call out “O gods in heaven, any strong one among you? Come, take this, I challenge!” That mount is Govardhana, where an elephant with a broken tusk stands up with a raised trunk on seeing the crescent moon, and bellows with a dribbling mouth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்