விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டுஇரங்கி* 
    ஏரார் கிளிக்கிளவி எம்அனைதான் வந்து என்னைச்*

    சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு* -- செங்குறிஞ்சித்  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அறிவு அழிந்து - மதிகெட்டு
தீரா உடம் பொடு - ஒழிய மாட்டாத உடம்போடு கூடி
பேது உறுவேன் - பைத்தியம் பிடித்தவள் போன்றிருந்த என்னை
எர் ஆர் கிளிகிளவி எம்அனை கண்டு இரங்கி -அழகிய கிளியன் பேச்சுப் போன்ற பேச்சையுடையளான என் தாயானவள் கண்டு இரக்கங்கொண்டு
தான வந்து - தானே (என் அருகில்) வந்து

விளக்க உரை

சைதந்யம் என்பது அடியோடே போயிற்று, பைத்தியம் பிடித்தவள் போன்று வாயில் வந்த்தைப் பிதற்றிக்கொண்டு கிடந்தேன், இப்படி கிடந்த என்னை எனது நன்றாய் கண்டு ‘ஐயோ! நம் மகளுக்கு இப்படிப்பட்ட நோய் நேர்ந்துவிட்டதே! இஃது எங்ஙனே தீரப்போகிறது‘ என வருந்தி, இதற்கு ஏதேனும் நல்ல பரிஹாரம் செய்வோமென்று சிந்தித்து “மாயன் தமரடி நீறுகொண்டு அணிய முயலில் மற்றிலே கண்டீர் இவ்வணங்குக்கே“ “தவளப் பொடிக்கொண்டு நீர் இட்டிடுமின் தணியுமே“ என்ற திருவாய்மொழியில் வாஸனையாலே பாகவதர்களின் ஸ்ரீபாதரேணுவைக் கொணர்ந்து ரக்ஷையிட்டாள். ஸ்ரீவைஷ்ணவ ஸந்தானத்திற்குத் தகுந்த இதனைச் செய்தும் ப்யாப்தி பெறமாட்டாத ப்ரேமாதிசயத்தாலே கலக்கமுற்று ஒரு தேவதாந்தரத்தின் காலிலும் கும்பிட்டாள். இப்பிறவியில் இன்றளவும் செய்தறியாத தொன்றாகிய இவ்வரிய செயலைச் செய்தவிடத்தும் என்நோய் தீரவில்லை. என் பைத்தியம் நீங்கவில்லை, போன மேனி நிறமும் மீண்டதில்லை, இப்படிப்பட்ட அவஸ்தையைக் கண்ட அங்குள்ள பழங்கதைகளறியும் பாட்டிமார் சிலர் வந்து, அந்தோ! நீங்கள் நோயின் நிதானமறியாது மனம் போனபடி செய்யப் பார்ப்பது தகுதியன்று, ‘கட்டுவிச்சி‘ என்று சொல்லப்படுகிற குறி சொல்லுங் குறத்தியர் சிலருண்டு, அவர்களை வரவழைத்துக் குறிகேளுங்கள், இந்நோயை விளைவித்தவன் இன்னானென்று தெற்றென விளங்கும், இங்ஙனே செய்யாமல் நீங்கள் தாந்தோன்றியாகச் செய்யும் பரிஹாரங்கள் எதுக்கு? என்று சொன்னார்கள். (தீராவுடம்பொடு) ஆபத்து மிகுந்தால் உடம்பு ஒழியலாமே, ஒழியாமல் ஆத்ம வஸ்துவைப்போலே அழியாத்தாயிருந்துகொண்டு துன்பப்படுத்துகின்ற தீ! என்ற வருத்தம் விளங்கும். பேதுறுவேன் –இரண்டனுருபு தொக்கியிருக்கிறது, பேதுறுவேனை என்றபடி.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்