விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆராயில்தானே அறம்பொருள் இன்பமென்று*
    ஆரார் இவற்றின் இடையதனை எய்துவார்*

    சீரார் இருலையும் எய்துவர்* (2) -- சிக்கெனமது

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆரம் நீர் வேலி - ஆவரண ஜலத்தைக் காப்பாக வுடையளாயுமிருக்கிற,
நிலம் மங்கை என்னும் இபாரோர் - ஸ்ரீ பூமிப்பிராட்டி யென்று சொல்லப்படுகிற இந்நிலவுலகத்திலே உள்ளவர்களால்
சொலப்பட்ட - கூறப்படுகின்ற (புருஷார்த்தங்கள்)
மூன்று அன்றே - மூன்றேயாம்,
அ மூன்றும் ஆராயில் அறம் பொருள் இன்பம் என்று - அம்மூன்று புருஷார்த்தங்கள் எவை யென்று ஆராய்ந்தால், தர்மம் அர்த்தம் காமம் என்பனவாம்

விளக்க உரை

அழகிய சேலையின் ஸ்தானத்திலே கடல் உள்ளதென்கிறார் இரண்டாவது விசேஷணத்தால் (ஸமுத்ராம்பரா) என்று வடமொழியிலே பூமிக்குப் பெயர் வழங்குமாறறிக. நெற்றிச்சுட்டியின் ஸ்தானத்திலே ஸூர்யனுளனென்கிறார் மூன்றாம் விசேஷணத்தால். மார்பின் ஸ்தாந்ததிலே பெரிய ஆறுகளும், அம்மார்பிலணியும் ரத்நயமான ஆபரணங்களின் ஸ்தாநத்திலே அவ்வாறுகளின் கலங்கிய செந்நீர்ப் பெருக்குகளும் உள்ளனவென்கிறார் நான்காம் விசேஷ்ணத்தால், மயிர்முடியின் ஸ்தானத்திலே நீர்காண்டேழுந்த காளமேகங்கள் உள்ளன வென்கிறார். ஐந்தாம் விசேஷணத்தால் இனி, சிறந்த மஹிஷி யென்றால் கட்டுங்கால்லுமாயிருப்பவே, அஃது இவளுக்கு முண்டோவென்ன, ஆவரணஜலமே இவளுக்கு காப்பெண்கிறார் ஆறாம் விசேஷணத்தால் நீர் ஆரம் –வேலி ஆரம் என்றது ‘ஆவரணம்‘ என்ற வடசொல்லின் கிதைவு என்பர். அண்டத்துக்குப் புறம்பே பெருகிக்கிடப்பது ஆவரண ஜலம் என்றுணர்க. இப்படிகளாலே நிலமங்கை என்றற்கு உரிய இப்பூமியிலே வாழ்பவர்கள் புருஷார்த்தமென்று சொல்வது, அறம் பொருள். இன்பம் என்கிற தர்ம அர்த்த காமங்கள் மூன்றேயாம்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்