விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒரு பேருந்தி இருமலர்த் தவிசில்,* 
    ஒருமுறை அயனை ஈன்றனை,* ஒருமுறை- 
    இருசுடர் மீதினில் இயங்கா,* மும்மதிள்- 
    இலங்கை இருகால் வளைய,* ஒருசிலை- 
    ஒன்றிய ஈர்எயிற்று அழல்வாய் வாளியில்- 
    அட்டனை,* மூவடி நானிலம் வேண்டி,* 
    முப்புரி நூலொடு மான்உரிஇலங்கு-
    மார்வினில்,* இருபிறப்பு ஒருமாண்ஆகி,* 
    ஒருமுறை ஈரடி மூவுலகு அளந்தனை,* 
    நால்திசை நடுங்க அம்சிறைப் பறவை-
    ஏறி,* நால்வாய் மும்மதத்து இருசெவி- 
    ஒருதனி வேழத்து அரந்தையை,* ஒருநாள்-
    இருநீர் மடுவுள் தீர்த்தனை,* முத்தீ- 
    நான்மறை ஐவகை வேள்வி,* அறுதொழில்-
    அந்தணர் வணங்கும் தன்மையை,* ஐம்புலன்-
    அகத்தினுள் செறித்து,* நான்குஉடன் அடக்கி- 
    முக்குணத்து இரண்டுஅவை அகற்றி,* ஒன்றினில்-
    ஒன்றி நின்று,* ஆங்கு இரு பிறப்புஅறுப்போர்-
    அறியும் தன்மையை,* முக்கண் நால்தோள்- 
    ஐவாய் அரவோடு* ஆறுபொதி சடையோன்- 
    அறிவுஅரும் தன்மைப் பெருமையுள் நின்றனை,* 
    ஏழ்உலகு எயிற்றினில் கொண்டனை,* கூறிய-
    அறுசுவைப் பயனும் ஆயினை,* சுடர்விடும்-
    ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை,* சுந்தர-
    நால்தோள் முந்நீர் வண்ண,* நின் ஈரடி-
    ஒன்றிய மனத்தால்,* ஒருமதி முகத்து-
    மங்கையர் இருவரும் மலரன,* அங்கையில்-
    முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,* 
    நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை,* 
    மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,*  
    அறுபதம்முரலும் கூந்தல் காரணம்*
    ஏழ்விடை அடங்கச் செற்றனை,*  அறுவகைச்-
    சமயமும் அறிவரு நிலையினை,* ஐம்பால்-
    ஓதியை ஆகத்து இருத்தினை,* அறம்முதல்-
    நான்கு அவைஆய் மூர்த்தி மூன்றாய்* 
    இருவகைப் பயன்ஆய் ஒன்றுஆய் விரிந்து-
    நின்றனை,* குன்றா மதுமலர்ச் சோலை- 
    வண்கொடிப் படப்பை,* வருபுனல் பொன்னி-
    மாமணி அலைக்கும்,* செந்நெல் ஒண்கழனித்- 
    திகழ்வனம் உடுத்த,* கற்போர் புரிசைக் -
    கனக மாளிகை,* நிமிர்கொடி விசும்பில்- 
    இளம்பிறை துவக்கும்,* செல்வம் மல்கு தென்- 
    திருக்குடந்தை,* அந்தணர் மந்திர மொழியுடன்- 
    வணங்க,* ஆடுஅரவுஅமளியில் அறிதுயில்- 
    அமர்ந்த பரம,*  நின் அடிஇணை பணிவன்- 
    வரும்இடர் அகல மாற்றோ வினையே   (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தவிசில் - ஆஸனத்தின் மீது
ஒருமுறை - ஒருகால்
அயனை - பிரமனை
இலங்கை - லங்காபுரியை
இரு கால்வளைய - இரண்டு நுனியும்
ஒரு சிலை - ஒப்பற்ற சார்ங்கவில்லில்
மூ அடி - மூன்றடி நிலத்தை
வேண்டி - யாசித்து
ஈர் அடி - இரண்டு திருவடிகளாலே
இரு நீர் மடுவுள் - ஆழமான நீரையுடைய மடுவின் (கரையிலே எழுந்தருளி)
ஒரு தனிவேழத்து - பரமவிலக்ஷணனான கஜேந்திராழ்வானுடைய
அரந்தையை - துக்கத்தை
ஐவகை வேள்வி - ஐவகை யஜ்ஞங்களையும்
அறுதொழில் - ஆறுவகைக் கருமங்களையும் உடையரான
முக்குணத்து - ஸத்வம், ரஜஸ்தமஸ் என்கிற மூன்று குணங்களில்
இரண்டு அவை - ரஜஸ்ஸையும் தமஸ்ஸையும்
அகற்றி - விலக்கி
ஐவாய் அரவோடு - ஐந்து வாயையுமுடைய பாம்பையும்
ஆறு பொதி சடையோன் - ஜடையையும் உடையனான ருத்ரனுக்கு
சுடர் விடும் ஐ படை - ஒளிவிடா நின்ற பஞ்சாயுதங்களும்
அமர்ந்தனை - பொருந்தப்பெற்றாய்
சுந்தரம் நால் தோள் - அழகிய நான்கு திருத் தோள்களையுடையனாய்
நெறிமுறை - சாஸ்திர முறைப்படியே யுள்ள
நால்வகை வருணமும் ஆயினை - நான்கு ஜாதிகளின் மரியாதைக்கும் நிர்வாஹகனாயிராநின்றாய்
வரு புணல் - எப்போதும் பெருகுகின்ற தீர்த்தத்தை யுடைய
பொன்னி - கோவேரியானது

விளக்க உரை

உலகங்களடங்கலும் பிரளயங் கொண்டபின் மீண்டும் உலகங்களைப் படைக்க எம்பெருமான் தனது திருநாபிக்கமலத்தில் நான்முகக் கடவுளை படைத்து அவனுக்கு வேதங்களை பழையபடியே ஓதுவித்து அப்பிரமனைக் கொண்டு முன்போலவே எல்லா வுலகங்களையும் எடைப்பதாக நூல்கள் கூறும். “உய்ய வுலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை“ என்றார் பெரியாழ்வார்.இராவணனுடைய ஒப்புயர்வற்ற செல்வத்தைக்கண்டு அனுமானும் அளவற்ற ஆச்சரியமடைந்தானென்பர் வான்மீகி முனிவர். இப்படிப்பட்ட இலங்கையை வாளியின் அட்டனை என்று அந்வயம் வாளியாவது அம்பு. அஃது எப்படிப்பட்டதெனில் அதன் கொடுமை தோற்ற மூன்று விசேஷணங்களிடுகிறார். இருகால் வளைய ஒரு சிலை யொன்றியதும், ஈரெயிற்றதும், அழல்வாயதுமாம் அவ்வாளி. ஸ்ரீ சார்ங்கமென்னும் இராமபிரானதுவில் இரண்டு கோடியும் வளைந்து நிற்குமென்றது இயல்பு நவிற்சி, ஸ்வபாவோக்தி. அந்த சார்ங்கத்திலே தொடுக்கப்பட்டதாம். ஈரெயிறு – ஈர்கின்ற எயிற்றையுடையது என்றுமாம். முப்புரிநூல் –ப்ரஹ்மசாரிகள் பூணும் யஜ்ஞோபவீதம் மூன்று புரியை யுடையதாம். (அதாவது – மூன்று வடமுடையதாம்) மானுரி – அந்தப்பூணுநூலில் க்ருஷ்ணாஜினத்தை முடிந்து அணிதல் மரபு. “மான் கொண்ட தோல் மார்பின் மாணியாய்“ என்றார் பெரிய திருமொழியிலும். இருபிறப்பு – ‘த்விஜ‘ என்றும், ‘த்விஜந்மா என்றும், த்விஜாதி என்றும் வடமொழியில் பார்ப்பனர் வழங்கப்படுவர். “ஜந்மநா ஜாயதே சூத்ர, கர்மணா ஜாயதே த்விஜ“ (யோனிபிற்பிறப்பது ஒரு பிறவி, பிறகு வேத மோதுதல் முதலிய கருமங்களால் பிறப்பது இரண்டாம் பிறவி) என்று சொல்லப்பட்டுள்ளமை காண்க.பெரிய காதுகளையுடையது என்றுமாம். யானைக்கு வாய்தொங்குதலும் மத நீர் பெருகுதலும் காதுகள் பெரிதாயிருத்தலும் அதிசயமாக விஸயமன்றே, இதைச்சொல்லி வருணிப்பதற்கு ப்ரயோஜனம் என்னெனில் – ஒரு குழந்தை கிணற்றில் விழுந்து போக, அதனையெடுத்துக் கரையிலேபோட்டவர்கள் “அந்தொ! இதொரு கையழகும் இதொரு தலையழகும் இதொரு முகவழகும் என்னே!“ என்று சொல்லி மாய்ந்து போவார்களன்றோ, அப்படியே எம்பெருமானும் யானையின் காலை முதலைவாயினின்றும் விடுவித்தபின் அதனுடைய வாயும் செவியும் முதலிய அவயவங்களின் அழகிலே ஆழ்ந்து கரைந்தமைதோற்ற அந்த பகவத் ஸமாதியாலே ஆழ்வார் ஆனையை வருணிக்கின்றாரென்க.நான்கு உடனடக்கி –“ஆஹா நித்ரா பய மைதுநாநி ஸாமாந்ய மேதத் பசுபிர் நராணாம்“ என்றபடி உணவு உட்கொள்ளுதல், கண்ணுறங்குதல், எந்த வேளையில் என்ன தீங்கு நேரிடுமோவென்று பயப்பட்டுக்கொண்டிருத்தல், விஷய போகங்களை யநுபவித்தல் என்கிற இந்நான்கும் நாற்கால் விலங்குகட்கும் பொதுவாகையாலே இவற்றைத் தள்ளி ஞானத்தையே கடைபிடித்து என்றதாயிற்று. முக்குணத்து இரண்டவை அகற்றி – ஸ்தவகுணமென்றும் ரஜோகுணமென்றும் தமோகுணமென்றும் சொல்லப்படுகிற மூன்று குணங்களில் ரஜஸ்ஸும் தமஸ்ஸும் அந்யதாஜ்ஞான விபரீதஜ்ஞானங்களுக்குக் காரணமாதலால் அவற்றையொழித்து, தத்துவ ஞானத்துக்குக் காரணமாகிய ஸத்வகுணத்தைடையராகி என்றபடி. ஆக இந்திரியங்களைப்பட்டி மேயாமலடக்கி, ஆஹார நித்ராபய மைதுநங்களை விலக்கி ஸத்வகுண நிஷ்டராயிருந்து யோகுபுரிந்து அந்த யோகத்தின் பலனாக ஸம்ஸாரப் படுகுழியைப் புல் மூடச்செய்து நற்கதி நண்ணுகின்ற மஹா யோகிகளால் அறியக்கூடிய ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடையவன் எம்பெருமான் என்றதாயிற்றுஆறுபொதி சடையோன் என்றவிடத்து அறியவேண்டிய கதை. எம்பெருமான் உலகளந்த காலத்தில் மேலே ஸத்யலோகத்திற் சென்ற அப்பெருமானது திருவடியைப் பிரமன் தன்கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவி விளக்க அந்த ஸ்ரீபாத தீர்த்தமாகப் பெருகித் தேவலோகத்திலிருந்த ஆகாச கங்கையை, ஸூர்யகுலத்துப் பகீரத சக்ரவர்த்தி கபிலமுனிவனது கண்ணின் கோபத்திற்கு இலக்காய் உடலெரிந்து சாம்பலாய் நற்கதியிழந்த தனது மூதாதையான ஸகரபுத்ரர் அறுபதினாயிரவரை நற்கதிபெறுவிக்கும் பொருட்டு நெடுங்காலம் தவஞ்செய்து மேலுலகத்திலிருந்து கீழுலகத்துக்குக் கொண்டு வருகையில், அவனது வேண்டுகோளாலும் சிவபிரான் தான் புனிதனாகவேண்டிய அபிநிவேத்தாலும் அந்நதியை முடியின்மேலேற்றுச் சிறிது சிறிதாகப் பூமியில் விட்டனன் என்பதாம்.ஹிரண்யகசிபுவின் உடன் பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன் தன் வலிமையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச்சென்ற போது தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் திருமால் மஹாவராஹரூபியாகத் திருவ்வதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக்கண்டு பொருது நோட்டினாற் குத்திக் கொன்று பாதாள லோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற் குத்தி அங்கு நின்று எடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளின்ன் என்ற வரலாறு இதில் அடங்கியது. இப்பொழுது நடக்கிற ச்வேத வராஹ கல்பத்துக்கு முந்தின பாத்மகல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளய ஜலத்தில் முழுகியிருந்த பூமியை மேலே யெடுக்க நினைத்து ஸ்ரீவரஹாவதாரத்தைச் செய்தருளிக் கோட்டு நுனியாற் பூமியை எடுத்துவந்தன்னென்ற வரலாறும் உண்டு. அதுவும் இங்கு அது ஸந்திக்கப்பட்டதாகலாம். ஏழுலகு என்றவிடத்துள்ள ஏழ் என்னுஞ் சொல் ஏழான எண்ணைக் குறிக்காமல் “ஸகலமான“ என்னும் பொருளைக் குறிக்கு மென்க. பூமண்டலம் முழுவதையும் என்றபடி. அன்றியே, ஸப்தத்வீபங் (ஏழு தீவு) களையுடைய பூமண்டலம் என்னவுமாம். அவையாவன – நாவலந்தீவு, இறலித்தீவு, குசையின்தீவு, கிரவுஞ்சதீவு, சான்மலித்தீவு, தெங்கின்தீவு, புட்கரத்தீவு என ஏழாம். கூறிய அறுசுவைப் பயனுமாயின – உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு என அறுசுவாயாம். இவை நிரம்பிய உணவு போலே பரமபோக்யன் எம்பெருமான் என்றவாறு. “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லாங் கண்ணன்“ என்று கொண்டிருப்பார்க்கு அநுபவ விஷயமாம் இது. “அச்சுவைக் கட்டி யென்கோ அறுசுவையடிசிலென்கோ“ என்றார் நம்மாழ்வாரும்.வித்வான்கள் படுகாடு கிடக்கும் நகரி“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்திக்குத் தகுதியாகப் புரி செய் என்ற பாடம் கொள்ளத்தக்கது, புரி என்ற வடசொல் நகரமெனப் பொருள்படும், கற்போர்களுடைய (வித்வான்களுடைய புரியாகச் செய்யப்பட்ட தென்க. மற்றொரு சிறிய வியாக்கியானத்திலே “தொழில் ஓரப்படா நின்றுள்ள மதிள்களையு முடையதாய்“ என்ற ஸ்ரீஸூக்திக்குத் தகுதியாக புரிசை என்ற பாடம் கொள்ளத்தக்கது. “கற்பு ஓர் புரிசை“ என்று பிரித்து, நல்ல வேலைப்பாடுகளையுடைய திருமதில்களை யுடைத்தான என்று கொள்க. புரிசை என்ற ஒரு பாடத்திலேயே இரண்டு வகைப் பொருள்களையும் பொருந்தவிடலாமென்பாரு முளர் நிற்க. கனக மாளிகைகளினின்றும் நிமிர்ந்த கொடியானது விசும்பி விளம்பிறையைத் துவக்குமென்ற அதிசயோக்தியினால் அவ்விடத்துத் திருமாளிகைகளின் ஓக்கம் தெரிவிக்கப்பட்டதாகும். ஆடு அரவு – எம்பெருமான் எப்போதும் தன்னோடு அணைந்திருக்கப் பெற்றதனால் மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகப் படமெடுத்தாடுவன் திருவனந்தாழ்வான். அமளி – படுகை. அறிதுயில் –ஜாகரணத்தோடு கூடிய நித்ரை, அதாவது யோக நித்ரை* உறங்குவான்போல் யோகு செய்யும் பெருமானிறே.

English Translation

On one big lotus navel, sitting with both legs crossed was born the one Brahma; then once, when the two orbs feared to pass above three-walled Lanka, you bent the two ends of one mighty bow and shot one arrow, with two curved teeth spitting hell-fire; asking for three strides of four-lands, you came wearing the three-twist thread of the twice born ones, at once with two steps, you measured the three worlds; the four Quarters trembled when you rods the five-feathered garuda, to save the four-legged three-ichored two-eared unique elephant Gajendra.Dame Earth with cloud-tipped-mountain-bosoms and see-through-ocean garments with veins of lush streams coursing her breasts, the dark rain-cloud-coiffured lady wears the radiant sun for a forehead ornament; under her reign, three cardinal principles are spoken of, these are dharma, Artha and Karma.Listen, let me say how it is hearsay; those who enter the orb of the seven-dark-steed-driven Sun and enjoy the nectar of immortality do remain there only, can never return.Seeing this, some old wives who knew past customs Advised, "Show her to a soothsaying gypsy, she will find out who possessed her". hearing this a dark tuffed-hair-gypsy who entered the company threw a handful of unhusked grain on a winnow plate. Then swearing and shaking all over, became cold.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்