விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தங்கா முயற்றியஆய்*  தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,* 
    எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல்,*-பொங்குஓதத்-
    தண்அம்பால்*  வேலைவாய்க் கண்வளரும்,*  என்னுடைய- 
    கண்ணன்பால் நல்நிறம்கொள் கார்?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாழ் விசும்பின் மீது பாய்ந்து - விசாலமான ஆகாசத்தின் மேலே ஸஞ்சரித்து
கண்வளரும் - திருக்கண் வளர்ந்தருளுகிற
என்னுடைய கண்ணன் பால் - எமது கண்ணபிரானிடத்திலுள்ள
எங்கே புக்கு - எந்த தேசத்திலேபோய்
எத்தவம் செய்திட்டன கொல் - எவ்வகையான தபஸ்ஸைச் செய்தனவோ? (அறியேன்.)

விளக்க உரை

இடைவிடாது பகவத்குணாநுபவம் செய்பவர்கட்கும் உலகத்துப் பொருள்களிலும் கண் செல்லுமே; சென்றாலும், பகவத்ஸம்பந்தத்தை முன்னிட்டு அப்பொருள்கள் அறியப்படுமேயன்றி லௌகிகப்பொருள்களாக மாத்திரம் அவை அறியப்படமாட்டாவே, அப்படியே மேகங்களிலே கண்செலுத்தின ஆழ்வார் அவற்றின் உருவத்தை எம்பெருமானுடைய திருநிறமாகவே திருவுள்ளம்பற்றி, ஆஆ! இந்த மேகங்கள் ஆசாசமடங்கலும் திரிந்து எந்த க்ஷேத்ரத்திலே சென்று என்ன தபஸ்ஸைச் செய்து இங்ஙனே திருமாலின் திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டனவோ! என்று வியந்து பேசுகிறார். திருவிருத்தத்தில் ‘மேகங்களோவுரையீற்று என்ற முப்பத்திரண்டாம் பாட்டும் “கடமாயினகள் கழித்து” என்ற முப்பத்தெட்டாம்பாட்டும் இப்பாட்டை ஒருபுடை ஒத்தனவாக இங்கு அநுஸந்திக்கத்தக்கன. “பால்வேலையாய்” =‘வேலா’ என்ற வடசொல் கடற்கரைக்குப்பெயர்; அது தமிழில் ‘வேலை’ என ஐயீறாகி ஆகு பெயரால் கடலை உணர்த்திற்கு; ஆகவே, பால்வேலை- க்ஷீரஸாகரம். “பால் வேலைநாய்க்கன்வளரு மென்னுடைய கண்ணன்” என்றது- ‘ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவரிகேதக:- நாகபர்யங்க முந்ஸ்சூஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்” என்ற பிரமாணத்தின்படியே திருப்பாற்கடலில் பள்ளிகொள்ளுதலை விட்டிட்டுக் கண்ணபிரானாக வந்து தோன்றின எம்பெருமானென்றபடி.

English Translation

The Lord my Krishna reclines in the deep Ocean of Milk in Yogic sleep. The ripe clouds have acquired his dark hue. But what penance they must have done, -restlessly tossing in the sky every which may, -to become that!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்