விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உள்நாட்டுத் தேசுஅன்றே!*  ஊழ்வினையை அஞ்சுமே,* 
    விண்நாட்டை ஒன்றுஆக மெச்சுமே,*-மண்நாட்டில்-
    ஆர்ஆகி*  எவ்இழிவிற்று ஆனாலும்,*  ஆழிஅங்கைப்- 
    பேர்ஆயற்கு ஆள்ஆம் பிறப்பு?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உன் நாடு தேச அன்றே - பரமபதத்திள்ள தேஜஸ்ஸையுடையதன்றோ?
ஊழ் வினையை அஞ்சுமே - அநாதியான பாவங்களைக் குறித்து அஞ்ச வேணுமோ?
விண் நாட்டை - ஸ்வர்க்க லோகத்தை
ஒன்று ஆக - ஒரு பொருளாக
மெச்சுமே - விரும்பக்கூடுமோ?

விளக்க உரை

எவ்வகையான இழிகுலத்திற் பிறந்தவர்களானாலும் எவ்வகையான கெட்ட நடத்தைகளை யுடையவர்களானாலும் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருந்தலாகிற ஒரு குணம் உள்ளதாகில் அப்படிப்பட்டவர்களுடைய பிறப்பு நித்ய ஸூரிகளின் திருமேயிபோலே மிக்க தேஜஸ்ஸையுடையதேயாம்; எப்படிப்பட்ட பாவங்களை அவர்கள் செய்திருந்தாலும் அவற்றுக்கு அஞ்சவேண்டியதில்லை; சுவர்க்க லோகத்திலுள்ள தேவர்களின் பிறவியிற்காட்டிலும் அவர்களுடைய பிறவி எவ்வளவோ சீர்மை பொருந்தியதாதலால் தேவபோனிப்பிறவியையும் இழிவாக நினைக்கவுரியது- என்று, பகவானுக்குத் தொண்டரயிருப்பாருடைய ஜன்மமே சிறந்த ஜன்மமென்கிறார் இப்பாட்டில். ப்ராஹ்மணஜாதியே சிறந்ததென்று பலர் ப்ரமித்திருப்பதுண்டாகையாலே அந்த ப்ரமத்தைப்போக்கித் தொண்டர்குலமே சிறந்த குலமென்கிறது இப்பாட்டு. பிராமண ஜாதியிற் பிறந்து வைத்தும் எம்பெருமானுக்கு அடிமைப்படாவில் அக்குலம் சண்டாள குலததிலும் நடை கெட்டதாம்; சண்டாளகுலத்திற் பிறந்து வைத்தும் வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்கு ஆளென்று உள்கலந்தார்களாகில் அவர்களே விண்ணுளாரிலுஞ் சீரியராவர்; ஆகவே ஜாதி அப்ரேயோஜகம்; பகவத் சேஷத்வமே ப்ரயோஜநம் என்றதாயிற்று. இவ்வர்த்தம் ஸ்ரீவைசகபூஷத்திலும் ஆசார்யஹ்ருதயத்திலும் நன்கு விசதமாகும். “தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜந்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத்தேசிறே” என்ற ஆசார்யஹ்ருதய ஸ்ரீஸூக்தி இவ்விடத்தில் அது ஸந்திக்கவுரியது. உண்ணாட்டுத்தேச = எம்பெருமானைக் கண்ணெடுத்தும் பாராத பாவிகள் நிறைந்த இந்த லீலாவிபூதி புறநாடென்னும், பகவத் கைங்கர்ய ரஸிகர்கள் நெருங்கி அவனுக்கு அந்தரங்கமாயிருக்கிற நித்யவிபூதி உள்நாடென்றும் கொள்ளத்தகும். ‘ உள்நாட்டுத்தேக” என்றது - பாமபவத்தில் எம்பெருமானுடைய கைங்கரியத்திற்குத் தகுதியாகக் கொள்ளுகிற தேஹம்போலே சேஷவஸ்துவான ஆத்மாவுக்கு இழிபிறப்பும் தேஜஸ்கரம் என்றவாறு. ‘அணையவூரப்புனைய, அடியும் பொடியும்படப் பர்வத பவநங்களிலே ஏதேனுமாக ஜனிக்கப்பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜந்மங்களைப் பெருமக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து ப்ரார்த்திப்பவர்கள்” என்ற ஆசாரிய ஹ்ருதய ஸூந்தியும் இங்கு அநுஸந்தோம்.

English Translation

A life given to servitide to the discus wielder who came on Earth as the Cowherd Lord,-byanyone, whosoever he may be wahtsoever lowly profession he may pursue, -is a life of glory on Earth, will such a one fear Karmas? Will such a one aim to heaven?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்