விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அதுவோ நன்றுஎன்று*  அங்கு அமர்உலகோ வேண்டில்,* 
    அதுவோ பொருள்இல்லை அன்றே?,*  -அதுஒழிந்து-
    மண் நின்று*  ஆள்வேன் எனிலும் கூடும் மடநெஞ்சே,* 
    கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அது ஒழிந்து -  அந்தப் பரமபதாநுபவத்தை உபேக்ஷித்து விட்டு
கண்ணன் - ஆசவிப்படி உபய விபூதியையும் அளிக்க வல்லவனான எம்பெருமானுடைய
தாள் - திருவடிகளை
வாழ்த்துவதே - மங்களாசாஸநம் பண்ணுவதையே
கல் - அப்பஸிக்கக்கடவாய்.

விளக்க உரை

உபய விபூதியையும் எளிதில் தந்தருளவல்ல எம்பெருமான் திருவடிகளையே வாழ்த்து நெஞ்சமே! என்கிறார். தேவதாங்தரங்கள் தம் தம் அடியவர்களுக்குச் சில அபேக்ஷிதங்களைத் தாக்கடவனவாகிலும் பரமபதத்தைத் தருவது எந்த தேவதைக்கும் முடியாதகாரியம்; எம் பெருமானுக்கோ அது பரமஸுலபமானது; ஆகையாலே, நெஞ்சமே! நீ பரமபதந் தவிர மற்றதெல்லாம் தீது என்று விட்டிட்டு,விலக்ஷணமான அப்பரமபதமொன்றையே விரும்புவாயாகிலும், அது எம்பெருமானுடைய திருவருளால் எளிதில் கிடைக்கக்கூடியதே; அதனைத் தருவதில் அவனுக்கு அருமையேயில்லை அவனுக்கு இது ஒரு சரக்கேயன்று காண்; அங்ஙனல்லாமல் பாவோ நாந்யத்ரா கச்சதி” என்று திருவடிசொன்னாற்போலலே அந்தப் பரமபதத்தையும் உபேக்ஷித்துவிட்டு இந்த மண்ணுலகத்திலேயே நிலைபெற்று நின்று அநுபவிக்க வேணுமென்று விரும்பினாயாகிலும் இதுவும் அவனால் எளிதில் தரக்கூடியதே; ஆகையால் ஐஹிகமோ ஆமுஷ்மிகமோ எந்த புருஷார்த்தமும் எம்பெருமானால் நாம் எளிதில் பெக்கூடியதே; ஆன பின்பு இப்படி ஸர்வேசக்தனான எம்பெருமானுடைய திருவடிகளையே வாழ்த்தப்பாராய்- என்றாராயிற்று. (பரமபதாநுபவத்திலும் இஹலோக போகத்திலும் விருப்பம் வைத்திடாமல் கண்ணன் கழிலிணை வாழ்த்துவதொன்றிலேயே நோக்காக இருக்கக்கடவை என்பது உள்ளுறை.) “அதுவோநன்று” என்றவிடத்து ஓகாரம் பரமபதத்தின் ஸவலக்ஷண்யத்தைக் காட்டும். “அமாரருலகு” என்பது ‘அமருலகு’ எனக் குறைந்து கிடக்கிறது. “அதுவோ பொருளில்லை” ‘அதுவோர் பொருளில்லை” என்பன பாடபேதங்கள். மண் நின்று ஆள்வேனெனிலும் = இதற்கு இரண்டுவகையாகப் பொருள்கொள்ளலாம்; இந்த மண்ணுலகத்திலேயே யிருந்து கொண்டு பகவத்விஷயத்தையநுபவிக்க விரும்பினாலும் என்பது ஒருபொருள். “ஒரு நாயகாமய் ஒடவுலகுடனாண்டவர்” என்கிறபடியே இவ்வுலகத்தில் ஐச்வரியத்தை யநுபவிக்கவிரும்பினாலும் என்பது மற்றொரு பொருள். விரும்பும் பலன் எதுவாயினும் பகவானுடைய திருவடிகளை வாழ்த்துவதே பாத்திரையாயிருக்க வேணுமென்று விளக்கியவாறு. முதலடியில் “அமருலகோ வேண்டில்” என்றதக்கும் ‘ஸ்வர்க்கலோக புருஷார்த்தத்தை விரும்பினாலும் என்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும். திவிவா புவிவா மாமஸ்து வாஸோ நரகேவா நரகாந்தக! ப்ரகாமம்- அவதீரித சாரதாரவிந்தௌ சரணௌ தே மரணேபி சிந்தயாநி” என்ற முகுந்தமாலையை ஒரு புடையொக்குமிப்பாசுரம்.

English Translation

O Foolish Heart! If you desire the world of celestials thinking there lies the best, that is no exalted goal. Instead, if you remain on Earth and rule, that is good. Only learn to praise Krishna's feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்