விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்*  தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்- 
    பொட்டத் துற்றி*  மாரிப் பகை புணர்த்த*  பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை* 
    வட்டத் தடங்கண் மட மான் கன்றினை*  வலைவாய்ப் பற்றிக் கொண்டு*  குறமகளிர்- 
    கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குறமகளிர் - குறப்பெண்கள்;
வட்டம் தட கண் - வட்டவடிவான பெரிய கண்களை யுடையதும்;
மடம் - (தனது தாய்க்கு) வசப்பட்டிருப்பதுமான;
மான் கன்றினை - மான்குட்டியை;
வலை வாய் - வலையிலே;
பற்றிக்கொண்டு - அகப்படுத்தி;
 

விளக்க உரை

“துன்னுசகடத்தாற்புக்க பெருஞ்சோற்றை” என்றபடி வண்டி வண்டியாக வந்து திரண்டு கிடந்த சோற்றின் மிகுதியைக் கொண்டு ‘சோற்றுப் பகுப்பதம்’ எனப்பட்டது. மலையில் ஓடைகளுஞ் சேறுகளும் இன்றியமையாதனவாதலால், இங்குத் தயிர்த்திரளை ஓடையாகவும் நெய்ப்பெருக்கைச் சேறாகவும் உருவகப்படுத்தினரென்க. சோற்றுத்திரளில் தொட்டியாகக்கட்டி அதில் தயிரையும் நெய்யையும் நிறைத்தமை தோற்றும். ‘நெடுநாளாக இந்திரனுக்குச் செய்துவந்த இப்பூஜையை நீ உனக்காக்கிக் கொள்ளவொட்டோம்’ என்று சில இடையர் மறுப்பர்களோ என்று சங்கித்துப் பொட்டத்துற்றினானாயிற்று; ஓர் இமைப்பொழுதளவில் அவற்றையெல்லா மமுதுசெய்திட்டனன். இவன் இவ்வாறு செய்யவே, பூஜையை இழந்த இந்திரன் பசிக்கோபத்தினால் புஷ்கலாவர்த்தம் முதலிய மேகங்களை ஏவி விடாமழை பெய்வித்ததனால் அம்மழையாகிற பகைக்குக் கண்ணபிரான் காரணமானமைப்பற்றி ‘மாரிப்பகைபுணர்த்த’ என்றார்.

English Translation

Gulping cooked rice heaped high, curds in pots and melted Ghee all in a trice, the deep ocean-hued Lord invited unfriendly rains, then for an umbrella, victoriously lifted a mount. That mount is Govardhana where gypsies catch wide-eyed fawns in nets and bring them up feeding them with milk through cotton wicks.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்