விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எமக்கு யாம் விண்நாட்டுக்கு*  உச்சமதுஆம் வீட்டை,* 
    அமைத்திருந்தோம் அஃதுஅன்றே ஆம்ஆறு,*-அமைப்பொலிந்த-
    மென்தோளி காரணமா*  வெம்கோட்டுஏறு ஏழ்உடனே,* 
    கொன்றானையே மனத்துக் கொண்டு?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெம்கோடு ஏழ் ஏறு - கொடிய கொம்புகளையுடைய ஏழு நாளைகளை
உடனே - ஒரு நொடிப்பொழுதில்
சொன்றானையே - முடிந்த எம்பெருமானையே
மனத்துகொண்டு - சிந்தையில் தியானித்துக் கொண்டு
யாம் - அடியோம்

விளக்க உரை

இப்பாட்டிலும் தம்முடைய உறுதியையே பேசுகிறார். இப்பாட்டுக்கு இரண்டுபடியாகப் பொருளுரைக்க இடமுண்டு. ஸ்ரீக்ருஷ்ணனாய்த் திருவவதரித்து நப்பின்னைப்பிராட்டியைத் திருமணம் புணர்வதற்காக ஏழு ரிஷபங்களை வலியடக்கின எம்பெருமானையே நான் எப்போதும் உள்ளத்திற் சிந்தனை செய்து கொண்டிருக்கிறேனாகையால் அப்பெருமானுடைய நித்யாநுபவத்திற்குப் பாங்கான பரமபதத்திற் சென்று அநுபவிக்கவேணுமென்பதையே மநோரதித்துக் கொண்டிருக்கிறேன்; ஸம்ஸாரத்தில் காலூன்றி நிற்கமாட்டாத முமுக்ஷுக்களுக்கு இதுவேயன்றோ தகுதி- என்பது ஓர் அர்த்தம். இப்பொருளில், வீட்டை அமைத்திருந்தோம் என்பதற்கு, பரமபதம் பெறப் பாரித்திருக்கின்றோம் என்று அர்த்தமாகும்; இனி, அமைத்திருந்தோம் என்பதற்கு ‘வேண்டாமென்றிருந்தோம்’ என்றும் பொருளுண்டாகையாலே, கீழ்க்கூறிய கருத்துக்கு நேர்மாறாக மற்றொரு தாத்பர்யமுங் கொள்ளலாம்; அதாவது- ஸ்ரீராம குணங்களில் ஈடுபட்ட சிறிய திருவடி ** “ஸ்நேஹோ மே பரமோ ராஜத்! த்வயி நித்யம் ப்ரதிஷ்டித: பக்திச்ச நியதா வீர! பாவோ நந்யத்ர கச்சதி” என்று - இங்குற்ற அநுபவத்தைவிட்டுப் பரமபதம் போகவும் என் மனம் விரும்புவதில்லை என்றாற் போலவும்,“பச்சைமாமலைபோல் மேனிப் பவளவாய் கமலச்செங்கண், அச்சுதா அமரரேறே ஆயந்தங்கொழுந்தே யென்னும், இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்,அச்சுவைபெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே.” என்று தொண்டரடிப்பொடியாழ்வாரருளிச் செய்தாற்போலவும் ஸ்ரீ கிருஷ்ணகுண சேஷ்டிதங்களின் அநுபவத்திலே மிக்க விருப்பமுடைய இவ்வாழ்லார்தாமும் பரமபதத்தை வேண்டாவென்கிறார் என்க. ‘எம்மாவீட்டுத்திறமும் செப்பம்.” (2-9-1) என்று திருவாய்மொழியிலும் இங்ஙனே அருளிச்செய்தவரிறே. அமை என்று மூங்கிலுக்குப் பெயர், மூங்கில்போலே திரண்டு உருண்டு விளங்குகின்ற தோள்களையுடையவளான நப்பின்னைப் பிராட்டிக்காகக் கொடிய எழுரிஷபங்களை உடனே முடித்தவனான கண்ணபிரானையே நான் மனத்திற் கொண்டிருப்பதனால் அந்த குணசேஷ்டிதத்தில் ஈடுபட்டிருக்கிற எனக்குப் பரமபதம் எதுக்கு? என்கிறார் காணும். எமக்கு + யாம், எமக்கியாம்; “யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை = இங்கு விண்ணாடென்று பரமபதத்திற்குக் கீழ்ப்பட்ட மேலுலகங்களைச் சொல்லுகிறது. அவற்றிற்காட்டில் உச்சமதானவீடு- பரமபதம் உச்சம்- வடசொல்.

English Translation

For the sake of the slender-armed Nappinnari the Lord killed seven mighty bulls at once, contemplating him, we have sought the home of Vaikunta, higher than the highest heavens. Is that not fit and proper?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்