விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    'வலியம்' எனநினைந்து*  வந்துஎதிர்ந்த மல்லர்* 
    வலிய முடிஇடிய வாங்கி,*-வலியநின்-
    பொன்ஆழிக் கையால்*  புடைத்திடுதி கீளாதே,* 
    பல்நாளும் நிற்கும்இப் பார்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புடைத்திடுதி - (அந்த மல்லர்களை) அடித்துவிட்டாய்;
வந்து எதிர்த்த மல்லர் - எதிரிட்டு வந்த மல்லர்களுடைய
இப்பார் - இவ்வுலகமானது
கீளாதே - வயிறு வெடித்து மாய்ந்து போகாமல்
பல் நாளும் நிற்கும் - சிரஞ்ஜீவியாயிருக்கின்றதே! (என்ன கல் நெஞ்சோ!)
 

விளக்க உரை

பூதனையைமுடித்த விஷயத்தைக் கீழ்ப்பாட்டில் பேசவே, அத்தோடு ஒரு கோவையான மல்லவத சரித்திரமும் நினைவுக்குவர, அதனை இப்பாட்டில் பேசுகிறார். முரட்டுமல்லர்களோடு நீ போர் செய்ய நேர்ந்த காலத்து உனது ஸுகமாரமான திருக்கைகளாலே அந்த மல்லர்களை நீ புடைக்கும் போது இவ்வுலகில்கண் இருந்த படுபாவிஜனங்களெல்லாம் “ஐயோ! நமது சரண்யனுக்கு என்ன தீங்க விளைந்திடுமோ!” என்று சிறிதும் வயிற்றெரிச்சல் படாதே கல்லாகக் கிடந்தவனே! அந்தோ! என்று இன்று தாம் வயிற்றெரிச்சல் படுகிறார். ஸ்ரீக்ருஷ்ண பலராமர்களை எவ்வகையினாலாவது கொன்றிட வேணுமென்று கறுக்கொண்ட கம்ஸன் வில்விழாவென்கிற ஒரு வியாஜம் வைத்து அவர்களைத் தனது படைச்சாலைக்கு வரவழைத்தான்; அப்போது அவர்கள் அவனது ஸபையிற் செல்லுகையில் அவர்களை யெதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்ஸனால் ஏவி நிறுத்தப்பட்டிருந்த சாணூரன் முஷ்டிகள் முதலிய பெருமல்லர்கள் சிலர் வந்து எதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர் செய்ய, அவர்களையெல்லாம் அவயாதவ வீரரிருவரும் மற்போரினாலேயே கொன்று வென்றிட்டனர் என்பது மல்லரைப் புடைத்த வரலாறு. அன்றி, கண்ணன் பாண்டவ தூதனாய்த் துரியோதனனிடஞ் சென்றபொழுது துரியோதனன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகக்பெரிய நிலவறை யொன்றைத் தோண்டுவித்து அதில் அனேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளேயிருக்கவைத்து அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற்பிளப்புக்களால் மேலே மூடி அதன்மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை யமைத்து அவ்வாஸனத்திற் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல, அங்ஙனமே ஸ்ரீபிருஷ்ணன் அதன் மேல் ஏறின பாத்திரத்திலே மூங்கிற் பிளப்புக்கள் முறிபட்டு ஆஸனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில் அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வரூபமெடுத்துக் பல கைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்க்கவே, அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர் என்பதொரு கதையும் உண்டு. நாங்களே மஹா பலசாலிகள் என்ற செருக்குற்று எதிரிட வந்த மல்லர்களுடைய வலிமிக்க முடிகள் சிதறிப்போம்படி நீ உனது அழகிய திருக்கைகளால் புடைக்கச்செய்தே அதனைக் கண்டு கொண்டிருந்த இவ்வுலகமானது வயிறுவெடித்து மாய்ந்து போகாமல் சிரஞ்சீவியாயிருந்ததே! என்ன கல் நெஞ்சே! என்றாயிற்று.

English Translation

O Strong one! The wrestlers thought they were strong, but you, -with your beautiful discus-bearing hands, -rolled their strong heads and destroyed them. Now the world can live undisturbed for many years.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்