விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வலங் காதில் மேல்-தோன்றிப் பூ அணிந்து*  மல்லிகை வனமாலை மௌவல் மாலை* 
    சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத்*  தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி* 
    அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை*  அழகு கண்டு என்மகள் ஆசைப்பட்டு*
    விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர்* வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே.* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வலங்காதில் - வலது காதில்;
மேல் தோன்றிப் பூ - செங்காந்தள் பூவையும்;
வனம் மல்லிகை மாலை - (திருமார்பில்) காட்டுமல்லிகை மாலையையும்;
மௌவல் மாலை - மாலதீ புஷ்ப மாலையையும்;
அணிந்து - அணிந்துகொண்டு,;

விளக்க உரை

கண்ணன் பசுக்களை மேய்த்துவிட்டுப் பலவகையலங்காரங்களோடு திரும்பிவரும்போது என் பெண் அவனுடைய மநோஹரமான அழகைப் பார்த்து ஆசைகொண்டு ‘இது கண்டவர்களை வருத்தும்’ என்று கண்ணை மாற வைத்து விலங்க வேண்டியதாயிருக்க, அப்படி செய்யாமல் அவனழகைப் பார்த்துக்கொண்டு எதிரே நின்றதனால் வளைகழல உடம்பு மெலியப்பெற்றாளென்று - தன் பெண்ணின் தன்மையை வினவவந்தவர்கட்குச்சொல்லி வருந்துகின்றாளொருத்தி. இடக்காதிற்கு ஒன்றும் சாத்திக் கொண்டதாகச் சொல்லாமையால் ஒரு காதுக்குச் சாத்திக் கொண்டிருக்குமதுதானே ஓரழகாகக் கொண்டு வந்தானென்றாவது, ஒரு காதுக்குச் சாத்தின வளவிலே மல்லிகை மௌவல் மாலைகளைக் கண்டு மற்றொரு காதிற்குத் தோன்றிப்பூவைச் சாத்திக் கொள்ள மறந்தானென்றாவது கொள்க. உடம்பு மெலிந்ததை முன்னே சொல்லாமல் வளைகழன்றதை முன்னே சொன்னதற்குக் காரணம் - வளைகழன்றபின்பே இவளுடம்பு மெலிந்ததைத் தானறிந்ததனாலென்க. வனம் என்று அழகுக்கும் பேர். மௌவல் என்று மல்லிகைக்கும் முல்லைக்கு மாலதிக்கும் பேர்; “மல்லிகை மௌவல்,” “மௌவலுந் தளவும் கற்பு முல்லை,” “மாலதி மௌவலாகுமென்ப என்பவை - சேந்தன்திவாகரம். சிலிங்காரம் - ????ம்; அலங்காரமென்றபடி. தீம் - இனிமை; “தீமு மதுரமுந் தேமுந் தேக்கும், ஆயநான்குந்த தித்திப்பாகும்” என்பது நிகண்டு. மெய்மெலிகின்றது - இதுவும் கீழிற்பாட்டுக்களிற்போல, வழுவமைதி.

English Translation

Wearing a bunch of glory-lily flowers on his right ear and a tall garland of jasmine flowers on his shoulders, letting his long curly hair cascade stylishly, he played on his flute sweetly, on and on, seeing the cowherd lad come in such grandeur, my daughter desired his beauty; she stood confronting him, instead of making way. Alas, her ivory arm-rings have slipped, her body has shriveled!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்