விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இங்குஇல்லை பண்டுபோல்*  வீற்றிருத்தல்,*  என்னுடைய- 
    செங்கண்மால் சீர்க்கும் சிறிதுஉள்ளம்,*  -அங்கே-
    மடிஅடக்கி நிற்பதனில்*  வல்வினையார் தாம்,*  ஈண்டு- 
    அடிஎடுப்பது அன்றோ அழகு?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சீர்க்கும் - கல்யாண குணங்களுக்கே
உள்ளம் சிறிது - எனது நெஞ்சு இடம்போராத தாயிருக்கின்றது.
அங்கே - முன்பு விசாலமாக வாழ்ந்தவிடத்திலே
வீற்றிருத்தல் இல்லை - (பாவங்கள் இனி) தங்கியிருக்க முடியாது (ஏனென்றால்)
வல்வினையார் தாம் - கொடிய பாவங்கள்

விளக்க உரை

“இங்கே மடியடக்கி நிற்பதனில்” என்று பாடமிருந்திருக்க வேணுமென்று சிலர் சொல்லுவர்; அது வேண்டா; அங்கே என்றிருப்பதே அழகியது ஆழ்வாருடைய நெஞ்சுக்கும் பாவங்களுக்கும் இப்போது நெடுந்தூரம் உள்ளமை உணர்க. தூரமான இடத்தைக் குறிப்பிடும்போது அங்கே என்றே குறிப்பிட வேண்டும். தவிரவும், “அங்கே மடியடக்கி நிற்பதனில் மீண்டடியெடுப்பதன்றோ வழகு” என்று உலகவழக்கச் சொல்லாகவும் கருதத்தக்கது. ‘தாங்கள் பெருமையாக வாழ்ந்தவிடத்திலே தங்களுக்கொரு குறை நேரிட்டால் அவ்விடத்திலேயே பிறர் சிரிக்கும்படி வருந்தி வாழ்வதிற்காட்டிலும் அவ்விடத்தைவிட்டுக் கண்மறைய ஓடிப்போவது நலம்’ என்று உலகில் ஸாமாந்யமாக வழங்குவதுண்டிறே; அந்த வார்த்தையை அநுவதிக்கிறபடியாகவுமிருக்கின்றது. இங்கு, மடியடக்கி நிற்பதனில் என்றது எங்ஙனே பொருந்தும்? ‘பாவங்களுக்கு மடியென்று ஒன்றுண்டாகின்லன்றோ அதையடக்கி நிற்க வேண்டா என்னலாம்- என்று சிலர் சங்கிக்கக்கூடும்; வல்வினையார் என்று உயர்திணையாகச் சொன்னதுக்குச் சேர உலகவழக்க சொல்லையும் கூட்டிக்கொண்டு அருளிச் செய்கிறபடி மூன்றாமடியின் இறுதியில் மீண்டு என்றும் ஈண்டு என்றும் பதம் பிரிக்கலாம். ஈண்டு என்பதற்கு சீக்கிரமாக என்றும் பொருள் கொள்ளலாம்.

English Translation

My heart is too small to contain my adorable red-eyed Lord's glory. Hence no longer can my past karmas sit here like old, Rather than stand in a comer and cringe. Let them find their way out and leave.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்