விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சொல்லில் குறைஇல்லை*  சூதுஅறியா நெஞ்சமே,* 
    எல்லி பகல் என்னாது எப்போதும்,*-தொல்லைக் கண்-
    மாத்தானைக்கு எல்லாம்*  ஓர் ஐவரையே மாறுஆகக்,* 
    காத்தானைக் காண்டும்நீ காண்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

து அறியா நெஞ்சமே - செய்ய வேண்டியது இன்னதென்றறியாமல் தளும்புகிற மனமே!
சொல்லில் குறை இல்லை - பகவத் விஷயத்தைப் பேசினால் பேச்சில் குறையில்லை; (அல்லது) நமக்கொரு குறையில்லை;
தொல்லை கண் - அநாதியான இப்பூமியில்
மா தானைக்கு எல்லாம் - (துரியோதநாதிகளுடைய) பெரிய சேனைகளுக்கெல்லாம்.
ஓர் ஐவரையே மாறு ஆக - பஞ்சபாண்டவர்களே எதிரிகளாம் படி

விளக்க உரை

மெய்யே காணவேணுமென்று விரும்பினால் காண்பதற்க எளியனோ அவன்? என்ன; அவனுடைய எளிமையை எடுத்துக் காட்டுகிறார் மேல். தொல்லைக்கண் மாத்தானைக்கெல்லாம் ஓரைவரையே மாறாகக் காத்தவனன்றோ அவன். தொல்லைக் கண் என்றது அநாதியான இப்பூமியிலே என்றபடி. “மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர்” (பெரியாழ்வார் திருமொழி 2-1-2) என்றபடி பாண்டவர்கட்கு எதிர்த்தலையில் திரண்ட சேனைகள் பிரபலமாகையால் மாத் தானைக்கெல்லாம் என்கிறார். தானை யென்று சேனைக்குப் பெயர். ஓர் ஐவரையே மாறாக = பல்லாயிரம் போர்வீரர்கள் திரண்டு கிடக்கிற சேனைகளுக்கெல்லாம் எதிர்க்கக்ஷியில் பாண்டவர்கள் ஐந்துபேர் மாத்திரமே நின்று வெற்றி பெற்றார்களென்று உலகில் புகழ் கிளம்பும்படி ரக்ஷித்தமை சொல்லுகிறது. எம்பெருமான்தானே துரியோதனாதியர்க்கு எதிரியாய் நின்று போர் செய்யக்கூடுமாயினும், அப்படி நின்றால் அவர்கள் போர்க்களத்திற்கே வரமாட்டார்களென்று, தான் ஆயுத மெடுப்பதில்லையென்று ப்ரதீஜ்ஞையும் பண்ணி, பஞ்சபாண்டவர்களே போர் புரிந்து வெற்றி பெற்றனரென்று பாரோர் புகழச் செய்து வைத்தனனென்க. காத்தானைக் காண்டும் நீ காண் = ‘அடியவர்கள் விஷயத்தில் இவ்வளவு பக்ஷபாதம் வைத்து ரக்ஷிப்பதில் தீக்ஷிதனாயிருப்பவன் எம்பெருமான்’ என்று நாம் தெரிந்து கொண்டோமாயின், இனி நாம் அவøன் காண வேணுமென்று மெய்யே விரும்பவேண்டுமென்பதேயுள்ளது. அப்படி காண விரும்புகிறபக்ஷத்தில் கண்டே விடலாம்; இதை நீ அநுபவத்தில் காண்பாய் என்று ஆழ்வார் தமது திருவுள்ளத்தை நோக்கி அருளிச் செய்தாராய்த்து. எல்லிப்பகலென்னாதெப்போதும் என்பதை காத்தானை என்றவிடத்திலும் அந்வயிக்கலாம், காண் என்றவிடத்திலும் அந்வயிக்கலாம். இரவுபகலென்று பாராமல் ஸர்வ காலத்திலும் பாண்டவர்களை ரக்ஷித்துக்கொண்டிருந்தவனை என்று முந்தின யோஜகையில் பொருளாம்; நெஞ்சே! அவனை நீ இரவு பகல் வாசியின்றி எப்போதும் காண் என்று பிந்தின யோஜகையில் பொருளாம்.

English Translation

Nothing wrong in telling you, O innocent Heart! Night or day without interruption, at all times, the Lord offers protection to the five against the mighty army of marauders. You too can see him, look!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்