விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாழால் அமர்முயன்ற*  வல்அரக்கன், இன்உயிரை,* 
    வாழாவகை வலிதல்நின் வலியே,*  -ஆழாத-
    பாரும்நீ வானும்நீ*  காலும்நீ தீயும்நீ,* 
    நீரும் நீஆய் நின்ற நீ.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆழாத பாரும் நீ - (நீரில்; அழுந்தாமலிருக்கிற பூமியும் நீயிட்ட வழக்கு;
நீரும் நீ - ஜலதத்வமும்*;
தீயும் நீ - தேஜஸ்தத்வமும் நீ;
காலும் நீ - வாயுதத்வமும் நீ;
வானும் நீ - ஆகாசமும் நீ;

விளக்க உரை

“ஆழாத பாரும் நீரும் தீயும் காலும் வாலும் நீயாய் நின்ற நீ, நாழலமர்முயன்ற வல்லாக்கனின்னுயிரை வாழாவகை வலிதல் நின்வலியே?” என்று அந்வயம். மண் நீர் எரி காற்று ஆகாயம் என்கிற பஞ்ச பூதமுமாய் நிற்கிற நீ என்றதற்குக் கருத்து யாதெனில்; “விருத்தமான விபூதிகளைச் சேரவிட்டு அநுபவிக்கிறவுனக்கு என்னைச் சேரவிடுகை ஒரு பணியோ; விபூதி ஸாமாந்யங்களுக்கு நிர்வாஹகனாய் அவற்றைச் சொல்லுகிற சப்தம் உன்னளவும் வரும்படி நிற்கிற வுனக்கு, உனக்கே அஸாதாரணமாய் உன்னலல்லது சொல்லாதவர்களைச் சேரவிடுகை பணியோ வென்றுமாம்” என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி. மண்ணானது நீரில் கரைந்துவிடும்; நீரானது தீயை அணைத்துவிடும்; இப்படி பரஸ்பரம் விருத்த ஸ்வபாவங்களான பஞ்சபூதங்களை ஒன்று சேர சரீரமாகக் கொண்டு = யஸ்ய ப்ருதிவீ சரீரம். யஸ்ய ஆபச்சரீரம்” என்று வேதங்கள் ஓதும்பட நிற்கிறவுனக்கு அருமையென்று சொல்லக்கூடிய காரியம் ஒன்றுமேயில்லை என்றவாறு. ஆனாலும், நீ அருமையான காரியங்களைச் செய்கிறவன் என்று பாராட்டிச் சொல்ல வேண்டுமானால் என்னுடைய உறுதியைப் போக்கடித்து என்னை வாய்திறக்கப் பண்ணின இக்காரியமொன்றே அருமையாகப் பாராட்டிச் சொல்லவுரியது; என் உறுதியைக் காட்டிலும் லகுவான உறுதியையுடையரான இராவணாதிகளைப் பங்கப்படுத்தினாயென்பதை அருந்தொழிலாகப் பலரும் பாராட்டிச் சொல்லுகிறார்களே, அது பயனற்ற சொல் என்றாராயிற்று. நாழாலமர்முயன்ற என்றது - வணங்கா முடித்தனமாகிற அஹங்காரதோஷத்தினால் உன்னை எதிரிட்டுச் சண்டை செய்வதாக ஒருப்பட்டு வந்த என்றபடி அப்படிப்பட்ட வல்லரக்கனுண்டு- பெருமிடுக்கனான இராவணன், அவனுடைய தித்திப்பான பிராணனை அந்த சரீரத்தில் வாழவொட்டாமல் கவர்ந்து கொண்டது உனக்கு மிடுக்கோ? வலியே என்ற ஏகாரம்- வலியல்ல என்பதைக் காட்டும். என்னுடைய உறுதியைப் போக்கினது வலியேயன்றி அவனது உயிரைப் போக்கினது வலியல்லகாண் என்கை.

English Translation

Your engaged a boastful Rakshasa in a battle and took his sweet life. Does this behave your valour? –when you are the Earth, you are the sky, you are the wind, you are the Fire, You are the water, and you are yourself as well!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்