விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    'நுமக்குஅடியோம்' என்றுஎன்று*  நொந்துஉரைத்துஎன்,*  மாலார்- 
    தமக்கு அவர்தாம்*  சார்வுஅரியர் ஆனால்?*  -எமக்குஇனி-
    யாதானும்*  ஆகிடுகாண் நெஞ்சே,*  அவர்திறத்தே- 
    யாதானும் சிந்தித்து இரு.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெஞ்சே - ஓ மனமே!
(மாலார்) அவர் தாம் - எம்பெருமானாகிற அப்பெரியவர் தாம்
சார்வு அரியர் ஆனால் - நமக்குக்கிட்ட முடியாதவராயிருக்கும்போது
நொந்து உரைத்து என் - வாய் நோவச் சொல்வதில் என்ன பயன்?
இனி - இன்று முதலாக

விளக்க உரை

எம்பெருமானுடைய திருமேனியை ஸேவிக்கப் பெறவேணுமென்று ஆசை கொண்ட தம்முடைய மநோரதப்படியே அவன் ஸேவை தந்தருளாமையால் அவனிடத்தில் வீணாக அன்புவஹிப்பதில் என்ன பயன்? என்று நினைத்த ஆழ்வார் ‘இனி நாம் எம்பெருமானை நோக்கிப் பஞ்சைப் பாட்டுகள் பாடுவது அநாவச்யகம்; “எனக்கு நீயே கதி, எனக்கு நீயே கதி” என்று பலகாலும் சொல்லுவதில் என்னப்ரயோஜனம்? எவ்வளவு கதறினாலும் அந்தப் பெரியவர் நம்மை லக்ஷியம்பண்ணுகிறதில்லை; ஆகையால், இனி நாம் அப்பெருமானை நோக்கி “நுமக்கு அடியோம்” என்று சொல்வதை நிறுத்திவிட வேண்டியது- எனக் கருதி அக்கருத்தை இப்பாட்டில் முன்னடிகளில் வெளியிடுகிறார். அதற்கு மேல், இந்த உறுதியுடனே நாம் இருந்து விட முடியுமா’ என்று ஆலோசித்துப் பார்த்தார்; க்ஷணசாலமும் இப்படியிருந்திட முடியாதென்று துணிந்து, நெஞ்சை நோக்கி ‘நெஞ்சே! அப்பெருமாள் நம்மை அநுக்ரஹித்தாலும் அநுக்ரஹிக்கட்டும், நிக்ரஹித்தாலும் நிக்ரஹிக்கட்டும்: திருவுள்ளமானபடி செய்திடட்டும். நீ மாத்திரம் சிந்தனையை அவர் விஷயத்திலேயே செலுத்திக்கிட’ என்கிறார் பின்னடிகளில். “மாலார் தாம் சார்வரியரானால் (அந்த) மாலார் தமக்கு நுமக்கடியோமென்றென்று நொந்து உரைத்து என்?” என்று முன்னடிகளின் அந்வயம். மாலார்தாம்- ஆச்ரிதர்களிடத்தில்யாமோஹமே வடிவு கொண்டவர்’ என்று பேர் மாத்திரமேயா யிருக்கிற அவர் என்றவாறு. சார்வு அரியரானால் என்றது- நமக்கு நெருங்கியநுபவிக்கக் கூடாதவராயிருக்கையினால் என்றபடி நாம் ஆர்த்தியோடே நுமக்கடியோம் நமக்கடியோம் என்று எத்தனை தடவை சொன்னாலும் அவர் ஸேவைஸாதியாதிருக்குமளவில் அந்த வார்த்தையை நாம் வாய் நொவ வீணாகப் பலகால் சொல்லிக் கதறுவதில் யாது பயன்? நெஞ்ச உலரக் கத்துவது எதுக்கு? என்கை. நொந்து உரைத்தலாவது- ஆர்த்தியோடே சொல்லுதல்; வாய் நோவச் சொல்லுதலுமாம். பசித்தபோது சோறிடாதவனை நோக்கிச் சோறு சோறு என்று பலகால் கத்தினாலும் வாய்தானே நோகும். நெஞ்சே! எமக்கு இனி யாதானுமாகிகொண்; அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு= “நல்லவென் தோழி!நாகணைமிசை நம்பார், செல்வர் பெரியர், சிறுமானிடவர் நாம் செய்வதென்?” (நாச்சியார் திருமொழி 10-10) என்றாற்போலே, மிக்க பெரியவரான அவரை இன்னபடி செய்கவென்று நியமிக்க ஆராலாகும்; அவர் - நெறிகாட்டி நீக்கினாலும் நீக்கட்டும்,- கருமாமுறிமேனி காட்டினாலும் காட்டட்டும்; நீ அவர் விஷயமாகவே எதையாவது சிந்தித்திரு.

English Translation

O Heart! When even his beloved ones find it difficult to approach him, what use our pleading, "We are your slaves", thus and thus piteously? Let anything happen to us, you keep on thinking about him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்