விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அருகும் சுவடும் தெரிவுஉணரோம்,*  அன்பே- 
    பெருகும் மிகஇதுஎன்? பேசீர்,*  -பருகலாம்-
    பண்புடையீர்! பார்அளந்தீர்!*  பாவியெம்கண் காண்புஅரிய* 
    நுண்புஉடையீர்! நும்மை நுமக்கு. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தெரிவு உணரோம் - (நாங்கள்) பகுத்தறிந்தோமில்லை; (அப்படியிருக்கச் செய்தேயும்)
நுமக்கே - உம் விஷயத்திலேயே
அன்புமிக பெருமை - (எமக்கு) ஆசையானது மிகவும் பெருகா நின்றது;
இது என் - இதற்கு என்ன காரணம்?
பேசீர் - நீர்தாம் சொல்லவேணும்.

விளக்க உரை

எம்பெருமான் நெஞ்சுக்குமாத்திரம் விஷயமானானேயன்றி, கண்களால் காணவாவது கைகளாவணைக்கலாவது விஷயமாகவில்லை என்றார் கீழ்ப்பாட்டில். அப்படி கண்ணால் காணப்பெறாதிருக்கச் செய்தேயும், கண்ணால்கண்ட விஷயங்களிற்போல அன்பு அதிகரித்து வருகின்றதே, இதற்கு என்ன காரணம்? சொல்லாய் என்று அப்பெருமானையே கேட்கிறார். “பருகலாம் பண்புடையீர்! பாரளந்தீர்! பாவியேம் கண் காண்பரிய நுண்புடையீர்! நும்மை அருகும் சுவடும் தெரிவுணரோம்; (அப்படியிருந்தும்) நுமக்கே அன்புமிகப் பெருகும்; இது என்? பேசிர்” என்றுஅந்வயம். பருகலாம் பண்புடையீர் = பண்பு என்று பொதுவாகக் குணத்தைச் சொல்லுகிறது; இவ்விடத்தில், ஸௌசீல்யம் ஸௌலப்யம் என்கிற குணங்களின் நோக்கு. “கணைநாணில் ஓவாத்தொழில் சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே!, ஓவாத ஊணாகவுண்” என்று மேலே அருளிச் செய்கிறபடி பகவத் குணங்களை உணவாகக் கொள்ளுகிறவராதலால் பருகலாம் பண்புடையீர் என்கிறார். அப்படிப்பட்ட பண்பு உலகளந்த சரிமையில் விளங்கிற்றென்பார்போல அடுத்தபடியாகப் பாரளந்தீர் என்கிறார். (பாவியேம் இத்யாதி.) பாவிகளான என்போன்ற ஸம்ஸாரிகளுடைய கட்புலனுக்கு இலக்காகாத வைலக்ஷண்யத்தை யுடையவரே! என்றபடி. நம்மை அருகும் தெரிவுணரோம், சுவடும் தெரிவுணரோம் = “கருதரிய வுயிர்க்குயிராய்க் கரந்தெங்கும் பரந்துறையும் ஒரு தனிநாயகம்” (திருவரங்க்க கலம்பகம் 1) என்றபடி நீ எங்கணும் நிறைந்திருந்தாலும் அருகில் இருப்பதாக உன்னை நான் தெரிந்து கொள்ளவில்லை; (நீ எனக்கு ஸமீபத்தில் வந்து ஸேவை ஸாதிக்கவில்லையென்றபடி.) இப்போது அப்படி தெரிந்து கொள்ளாவிட்டாலும், இனி என்றேனு மொருநாள் தெரிந்துகொள்ள வழியுண்டோ என்னில்; சுவடுந் தெரிவுணரோம் = சுவடாவது அடையாளம்; உன்னுடைய ஸேவை கிடைக்கக் கூடுமென்று நினைப்பதற்குரிய அடையாளமு மொன்றும் கண்டினேன். என்னிடத்தில் ஏதாவது யோக்யதையிருந்தால் அந்த யோக்யதை நிமித்தமாக உன் ஸேவை கிடைக்கக் கூடுமென்று நினைக்க வழியுண்டு; அப்படிப்பட்ட யோக்யதை ஒன்றும் என் பக்கம் இல்லாமையாலே அந்த நினைவுக்கு ப்ரஸக்தியில்லை யென்கை. சுவடு என்பதற்கு போக்யதை என்கிற பொருளுங்கொள்ளலாம். திருவயோத்தியில் பிராட்டி இராமபிரனோடு பன்னிரண்டாண்டு கலந்திருந்து அவனுடைய ராஸிக்யத்தை அறிந்தாற்போலே நான் உன்னோடு கலந்தவனுமல்லேன், உனது ராஸிக்யத்தை அறிந்தவனுமல்லேன்; ஆயினும், அன்பு மாத்திரம் எனக்கு உன் மீதே வளர்ந்து செல்லுகின்றதே! இதற்கு என்ன காரணம்? சொல்ல வேணும்- என்கிறாராகவுமாம். ஆசார்யஹ்ருதயம் நான்காம் ப்ரகரணத்தில் (பத்தாவது ஸூத்ரத்தில்) “அருகுஞ் சுவடும் போலே” என்றவிடத்திற்கு வியாக்கியானமருளிச் செய்யா நின்ற மணவாள மாமுனிகள்- “உம்முடைய அருகு வருதல் உம்முடைய சுவடறிதல் செய்யாதிருக்க உம்மளவிலே ஸ்நேஹமானது அறமிக்கு வாராநின்றது; இதுக்கு அடி அருளிச் செய்தமை இங்கு நோக்கத்தகும்.

English Translation

O Lord, sweet as ambrosia! You are too subtile to be seen by our sinner-selves" eyes, Nor do we know the clues by which to attain you, yet our love for your swells. How come? Pray speak! O Lord with line lady of the lotus adoring your chest! O Lord who measured the Earth! My heart has already attained your feet. Alas, we sinners alone are still for away.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்