விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்* 
    தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா,* 
    யாவகை உலகமும் யாவரும் அகப்பட,* 
    நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்*
    மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க,*
    ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்- 
    அகப்படக் கரந்து ஓர் ஆல் இலைச் சேர்ந்த எம்-
    பெரு மா மாயனை அல்லது,* 
    ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே?  (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நளிர்மதி சடையனும் - குளிர்ந்த சந்திரனை ஜடையிலே யுடைய சிவனும்
நான்முகன் கடவுளும் - பிரமதேவனும்
தளிர்ஒளி இமையவர் தலைவனும் முதலா - தழைத்த ஒளிபொருந்திய தேவேந்திரனும் ஆகிய இவர்கள் முதலாக
யாவரும் - எல்லாப்பிராணிகளும்
யாவகை உலகமும - எல்லா வுலகமும்
அகப்பட - உட்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் - பூமி ஜலம் அக்நி வாயு, தேஜஸ் ஸுக்களையுடைய மஹத்தான ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களும்

விளக்க உரை

ஸகல சேதநர்களும் ஸ்வரூப்ராப்தசேஷியான எம்பெருமானை அடிபணிந்து அவனுக்கே வழுவிலாவடிமைகள் செய்ய ப்ராப்தமாயிருக்க அப்படி செய்யாதே தேவதாந்தரங்களை ஆச்ரயித்து ஸம்ஸாரத்தையே பூண்கட்டிக் கொள்ளுகிறார்களே! அந்தோ! இஃது என்ன அனர்த்தம்! என்று கீழ்ப்பாட்டில் கவலைப்பட்டார். ஒரு ஸம்ஸாரியாவது இவருடைய துயரத்தைப் பரிஹரிக்க முன்வராமற்போகவே, ‘இப்பாழும் ஸம்ஸாரிகள் எக்கேடாவது கெடட்டும் நாமும் அவர்களைப்போலே அனர்த்தப்பட்டுப் போகாமல் எம்பெருமானுக்கே அடிமைப்பட்டிருக்கப் பெற்றோமே! என்று தம்முடைய மனவுறுதிக்கு உகந்து பேசுகிறார் இதில். ஸம்ஸாரிகள் பற்றுகிற தேவதாந்தரங்கள் யாவும் நம்மைப்போலவே பலவகை ஆபத்துக்களுக்கு உள்ளாகி எம்பெருமானுடைய திருவருளால் தப்பிப்பிழைப்பவர்களே யொழியபிறருடைய ஆபத்துக்களைத் தாம் பரிஹரிக்கவல்ல ஸர்வ சக்தர்களல்லர் என்பதை விளக்க வேண்டி ‘இந்தத் தெய்வங்களெல்லாம் பிரளயகாலத்தில் எம்பெருமானது திருவயிற்றிலே பதுங்கிக்கிடந்தனை காண்மின்‘ என்கிறார். எல்லாத் தெய்வங்களையும் உய்யக்கொண்ட பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணனுக்கன்றி மற்றுயார்க்கும் நாம் அடிமைப்பட்டவர்களல்லோம் என்பது நிகமனம்

English Translation

All the worlds without a single exception, all the souls and all the gods, including the crescent-headed Siva, the four-faced Brahma, and the radiant Indra, along with Earth, fire, water air, space and the twin orbs, fitted into a small child's stomatch. The Lord swallowed everything and lay sleeping on a fig leaf in the deluge waters, Knowing him as we do, will we ever serve another god?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்