விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வணங்கும் துறைகள்*  பல பல ஆக்கி,*  மதி விகற்பால்-
    பிணங்கும் சமயம் பல பல ஆக்கி,*  அவை அவைதோறு-
    அணங்கும் பல பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்* 
    இணங்கும் நின்னோரை இல்லாய்,*  நின்கண் வேட்கை எழுவிப்பனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வணங்கும் - (தெய்வத்தை) வணங்குகிற
துறைகள் பலபல - வகைகள் பற்பலவற்றை
ஆக்கி - உண்டாக்கி
மதி விகற்பால் - அறிவின் வேறுபாட்டால்
பிணங்கும் - (ஒன்றொடொன்று) மாறுபடுகிற

விளக்க உரை

உரை:1

ஆழ்வார் எம்பெருமானை நோக்கி ‘ஒப்பற்ற பெருமானே! ஸர்வேச்வரனான நீ ரஜோகுண தமோகுணங்களால் மிக்கவர் கருமகதியால் உன்பக்கல் வாராதொழியும்படி பலபல தெய்வங்களையும் பலபல மதக்கோட்பாடுகளையும் பலபல உபாஸ்னைவிதங்களையும் ஏற்படுத்தி அமைத்து வைத்தாய்; உன்னை நேதராக அடைந்து உஜ்ஜீவிப்பதற்கு இடையூறான அவ்வெளி வழிகளிலே யான் இறங்கி விலகாதபடி அவற்றிற்கெல்லாம் மூலமான உது ஸ்யரூபத்தை யறிந்த உன்னிடத்திலே அன்பை மிகுதியாகச் செய்வதோடு பிறகும் அங்ஙனஞ்ª சய்யத் தூண்டுவேன்’ என்று இப்பாட்டால் விண்ணப்பஞ் செய்கிறார். ஆழ்வார் எம்பெருமானது திருவுள்ளத்தின்படி உலகத்தைச் சீர்திருத்தி நல்வழிப்படுத்த அவதரித்தவராதலால் இங்ஙனம் தமது செய்கையைக் கூறுதல் தகும். வணங்குந் துறைகள் பலபல வாக்கி= கர்மயோகமென்றும் ஜ்ஞாநயோகமென்றும் பக்தியோகமென்றும் இப்படி பலவகைப்பட்ட உபாயங்களைக் காட்டிவைத்து என்றபடி. மதிவிகற்பில் பிணங்குஞ் சமயம் பலபல வாக்கி= 1. ‘ஓன்றே பொருளெனின் வேறென்ப்வேறெனின் அன்றென்ப ஆறுசமயபத்தார்” என்றாற்போல, ஆம் என்பதை அல்ல என்பதும் அல்ல என்பதை ஆம் என்பதுமான சமயச் சண்டைகள் மதிவிகற்பால் பிணங்குதலாம். இப்படி பிணங்குகின்ற மதங்கள் பலவற்றையும் உண்டாக்கி வைத்தவன் எம்பெருமானேயிறே. அவையவைதோறு வணங்கும் பலவாக்கி = ஒவ்வொரு மதத்திலும் அம்மனென்றும் பிடாரி என்றும் சாத்தனென்றும் கூற்றனென்றும் பலவகைப்பட்ட தெய்வங்களை ஆராதனைக்கு உரியனவாக நாட்டி என்றபடி, நின்மூர்த்தி பரப்பி வைத்தாய்- அனைத்துக்கும் எம் பெருமானே அந்தராத்மாவாய் அவையெல்லாம் எம்பெருமானுடைய சரீரங்களாயுண்ளள்ளனவாதலால் இங்ஙனஞ் சொல்லப்பட்டது.

உரை:2

வணங்கும் துறைகள் பலவற்றையும், எதிர்க் கருத்துகளால் வேறுபடும் (பிணங்கும்) சமயங்கள் பலவற்றையும் அவைகள் உண்டாக்கும். தெய்வங்கள் பலவற்றையும், நீயே ஆக்கி உன் உருவத்தையே பரவ வைத்திருக்கிறாய். உனக்கு இணை (இணங்கு) யாரும் இல்லை. உன்மேல் எனக்கு வேட்கை எழுகிறது.

English Translation

O Lord without a peer! You made all these many modes of worship. You made all these conflicting schools of thought, and in each one of them you made all these many gods; and in all of them, you spread your peerless form. My heart swells with lover for you!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்