விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தையல் நல்லார்கள் குழாங்கள்*  குழிய குழுவினுள்ளும்,* 
    ஐய நல்லார்கள் குழிய விழவினும்,*  அங்கு அங்கு எல்லாம்-
    கைய பொன் ஆழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் நான்* 
    மைய வண்ணா! மணியே,*  முத்தமே! என் தன் மாணிக்கமே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தையல் நல்லார்கள் - அழகிய ஸ்த்ரீகள்
குழாங்கள் குழிய குழுவினுள்ளும் - கூட்டமாய்க் கூடின திரளினுள்ளே யாயினும்
ஐய நல்லார்கள் - சிறந்தவர்களான நல்லபுருஷர்கள்
குழிய விழவினும் - திரண்ட திருவிழாக்களிலாயினும்
அங்கு அங்கு எல்லாம் - இன்னும் அப்படிப்பட்ட திரள்களெல்லாவற்றிலுமாயினும்

விளக்க உரை

நாயகி நாயகனைக் காண விரைந்து பேசும் பாசுரம் இது. நாயகனுடைய விரஹத்தை ஆற்றாத நாயகி, அவனை என் காதலின்படி தனியே ஏகாந்தத்திற் கண்டு கூடிக் குலவி இன்புற கிடையாதாயினும் ஆண்களும் பெண்களும் பலர் கூடிய கூட்டத்தினிடையில் எங்கேனுங் காணக்கிடக்குமாயினும் அது கொண்டு ஆறியிருப்பேனென்று கருதிச் சொல்லுகிறாளென்க. “மையவண்ணா மணியே முத்தமே என்றன் மாணிக்கமே!” என்று முன்னிலையாகக் கூறியிருப்பது எங்ஙனே எனின்; நாயகனையே இடையறாது நினைத்துக் கொண்டிருந்து நினைப்பு மிகுதியால் அவனை எதிரில் நிற்கிறாய் போலப் பாவித்து முன்னிலைப்படுத்திக் கூறியினபடி, திருவாய்ப்பாடியிலுள்ள ஆயர் மங்கையர் கூடியாடுங் குரலைக் கூத்துப் போன்ற மகளிர் குழாத்திலும், தருமபுத்திரர் செய்த ராஜஸூப யாகம் போன்ற மஹாபுருஷர்களின் குழாத்திலும் எழுந்தருளி யிருப்பதற்குத் தகுதியுடைமைபற்றி “கையனல்லார்கள் குழாங்கள் நான்” என்றது. எம்பெருமான் பெண்களின் திரளிலும் மஹாபுருஷர்களின் கோஷ்டிகளிலும் ஸேவிக்கத் தகுந்தவனென்பதை ‘பல்லாயிரம் பெருந்தேவிமாரோடு பௌவமேற்துவரை, எல்லாருஞ் சூழச் சிங்காசனத்தே யிருந்தாளைக் கண்டாருளர்” “காந்தள் முகிழ்விரல்ருளர்” என்ற பெரியாழ்வார் பாசுரங்களாலு முணர்க. தையல் நல்லார்கள்- ஸ்திரீகளுட் சிறந்தவர் என்றும், ஐயநல்லார்கள்- ஆர்ய ச்ரேஷ்டர் என்றுங் கொள்க. தையல் நல்லார்கள் நல்- தையலார்கள் என மாறுதலுமாம். ‘குழிய’ என்றது குழுவிய என்றவாறு. (தழுவிய என்பது தழிய என்றும், கெழுவிய என்பது கெழிய என்றும் வருதல்போல. (சீவக சிந்தாமணி-சுரமஞ்சரியாரிலம்பகம் 32.) “தமிழ் கழியசாலவர்” (கந்தபுராணம்-அசுரக் காண்டம்) ‘தனது மாடே, தழிய காவலரை நோக்கி” ” (கந்தபுராணம்-அசுரக் காண்டம்) “கெழிய ராகுவுங் கேதுவும்” என்ற இடங்களில் ‘தழிய’ ‘கெழிய’ என்ற பிரயோகங்கள் காண்க.)

English Translation

O Dark Lord! My Gem! My pearl My Emerald! I long to see you, never mindifitbe in the midst of the milling crows of good ladies surrounding you, or in the festivals conducted by learned sees, or anywhere else. With your golden discus and white conch!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்