விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சுரிகையும் தெறி-வில்லும் செண்டு-கோலும்*  மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட* 
    ஒரு கையால் ஒருவன்தன் தோளை ஊன்றி*  ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்*
    வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்*  மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்* 
    அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள்*  அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தோழன்மார் - தன்னேராயிரம் பிள்ளைகள்,;
சுரிகையும் - உடைவாளையும்;
தெறி வில்லும் - சுண்டுவில்லையும்;
செண்டுகோலும் - பூஞ்செண்டுகோலையும்;
மேல் ஆடையும் - உத்தமுயத்தையும்;

விளக்க உரை

கரிகை - ??? என்ற வடசொல் திரிபு. தெறிவில் - கல் முதலியவற்றைச் செலுத்தும் சிறுவில். செண்டுகோல் - நுனியில் பூஞ்செண்டு கோத்துள்ள விலாஸதண்டம். நிரை என்றாலும் இனம் என்றாலும் கூட்டமே பொருள்; இதனால் எண்ணிறந்த பசுக்களை மேய்த்தவாறு தோற்றும். தூரத்திற்சென்ற பசுக்கள் அணுகுவதற்கும் மேய்கைக்கும் பக்கங்களில் விலகாமைக்கும் மற்றுஞ் சில காரியங்களுக்கும் ஸூசகமாகக் கண்ணபிரான் வகைவகையாகச் சங்கு ஊதுவன் என்க. இப்பாட்டின் கருத்து;- ஒருபெண் பிள்ளையின் தாய் சொல்லும் பாசுரம் இது. கண்ணபிரான் காட்டில் கன்றுகளை மேய்த்துவிட்டு, லீலோபகரணங்களுங் கையுமான தனது தோழன்மாருடன் மீண்டு வரும்போது வழியில் நின்று கொண்டிருந்த என்மகள் முதலில் அவனைப் பொதுவாகப் பார்த்தாள்; பிறகு ‘இவர்களில் இவனொருத்தன் விலக்ஷணனாயிருக்கின்றானே!’ என்று சிறிது உற்று நோக்கினாள்; உலகத்தில் அபூர்வ வஸ்துவைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் இது இயல்பே; நெஞ்சில் ஒருவகை ஆசையைக்கொண்டு பார்த்தாளில்லை; ஆயிருக்கச் செய்தேயும் ‘இவள் அவனை உற்றுநோக்கினாளாகையால் இவளுக்கும் அவனுக்கும் ஏதோ இருக்கின்றது’ என்று ஊரார் வம்பு கூறுகின்றனர், இது தகுமோ? என்று முறைப்படுகின்றாள். (மஞ்சளும்.) கீழ் “பற்றுமஞ்சள்பூசி” என்ற பாட்டின் உரையைக் காண்க. நின்றாள் - முற்றெச்சம். “அது கொண் டிவ்வூர்” என்ற பாடமும் சிறக்கும்; “கண்டதுவே கொண்டெல்லாருங்கூடி” என்ற திருவாய்மொழியையுங் காண்க. ஊர் - இடவாகுபெயர்.

English Translation

The team sent to bring back the cows returns with the tired Krishna resting his one hand one hand on a fellow’s shoulder and holding a conch in the other, as companions run after him carrying his sword, bow, arrow and cape. My daughter stood close and saw his dusty golden face, then looked again. Seeing this, the town has made out of a connection.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்