விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீர் அரசு ஆண்டு*  தன் செங்கோல் சில நாள்*  செலீஇக் கழிந்த,- 
    பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு,*  பார் அளந்த- 
    பேர் அரசே! எம் விசும்பு அரசே! எம்மை நீத்து வஞ்சித்த* 
    ஓர் அரசே! அருளாய்,*  இருளாய் வந்து உறுகின்றதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சீர் அரசு ஆண்டு                                         - சிறப்பாக ராஜ்ய பரிபாலனம் பண்ணி
தன் செங்கோல் சில நான் செலீ இ - தனது நீதி தவறாத ஆஜ்ஞையைச்சில காலம் (உலகத்திற்) செலுத்தி
கழிந்த                                                               - பின்பு இறந்தொழிந்த
பார் அரசு                                                         - ஸார்வபௌமனான ஒரு சக்ரவர்த்தியை
ஒத்து                                                                 - போன்று

விளக்க உரை

பிரிவாற்றாத தலைவி மாலைப்பொழுது கண்டு இரங்கி யுரைக்கும் பாசுரம் இது. இப்பாட்டில் நாயகனை நோக்கின் விளியுள்ளதனால், உருவெளிப்பாட்டில் கண்ணெதிரில் நாயகன் காணப்பட்டாதென்றும் அன்னவனை நோக்கி இது கூறுகின்ற தென்றுங் கொள்க. ஸூர்யன் உலகமுழுவதும் பகலெல்லாம் தடையறத் தனது செய்ய கிரணத்தைச் செலுத்திப் பின் அப்பாற் சென்றபடியை “சீராசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்தஅ பாராசொத்து மறைந்தது நாயிறு” என்றார். ஓரரசன் சிறப்பாக ராஜ்யத்தை அரசாட்சி செய்து தனது நீதி தவறாது ஆஞ்ஞையைச் சிலகாலம் உலகததிற் செலுத்திப் பிறகு இறந்தொழியுமாபோலேயிருக்கிறதாயிற்று ஸூர்யாஸ்தமனம், நாயகனே! இப்பொழுது நீ என்னை வந்து சேர்ந்திடாயாயின் அரசனில்லாத ராஜ்யத்தில் கணவனையிழந்த பெண்மகள் கொடியரால் படும் பாட்டை யான் இருளினால் படுவேன் என்பது தோன்ற இது சொல்லப்பட்ட தென்க. இருளின் கையிலே யகப்பட்ட ஸூர்யனையும் தன்னையும் மீட்கைக்கு மஹாபலிகையிலே யகப்பட்ட உலகத்தை மீட்டவன் வேண்டுமென்பாள் பாரளந்த பேரரசை விளித்தாள். எம் விசுபரசே!= பரமபதத்தைப்போலவே எம்மையும் அநந்யார்ஹ சேஷமாக்கிக் கொள்ளதக்கவனே! என்றபடி. முதலில் என்னை விட்டுப் பிரியவேமாட்டேன், என்று சொன்னதும், பின்பு ‘இன்ன காலத்தில் வருவேன்’ என்று காலங்குறித்துக் கூறினாலும் இரண்டும் பொய்யாம்படி. தன்னைப் பிரிந்து சென்று நெடுநாள் வாராது விளம்பித்தது பற்றி “எம்மைநீத்து வஞ்சித்த ஓராசே” என்றாள். ‘இவ்விடத்து ஓராசே!’ என்றது இப்படியும் ஒரு தலைவனுண்டோவென்று குறை கூறியவாறு. “எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே!” என்பதற்கு- “என்னை உபேக்ஷித்து உன்னைக் காட்டாதிருக்கிற இந்த ஸ்வபாவத்திலே முடிசூடியிருக்கிறவனே!” என்று விசேஷார்த்தம் உரைப்பர். ‘வஞ்சித்த’ என்னும் பெயரெச்சத்தின் ஈறு தொக்கியிருப்பதால் ‘வஞ்சித்தோராசே’, என்றாயிற்று. செலீஇ = செலுத்தி; சொல்லிசை யளபெடை! இங்கு அளபெடை அலகுபெறவில்லை.

English Translation

Extending the sceptre of his just rule for a few days, -like the countless kings of the Earth, -the Sun has disappeared. O, Mighty king who measured the Earth, O king of the celestials! O, king of the domain of despair through separation! Grace us! A terrible palll surrounds us.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்