விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அளப்பு அரும் தன்மைய ஊழி அம் கங்குல்,*  அம் தண்ணம் துழாய்க்கு-
    உளப் பெருங் காதலின் நீளிய ஆய் உள,*  ஓங்கு முந்நீர்-
    வளப் பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல் வினையேன்*
    தளப் பெரு நீள் முறுவல்,*  செய்ய வாய தட முலையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அளப்பு அரு தன்மைய - “அளவிடுதற்கு அரியதான தன்மையையுடைய
ஊழி - கற்பங்களினும்
அம் - அழகிய (நீண்ட)
கங்குல் - இராப்பொழுதுகள்
அம் தண்ணம் துழாய்க்கு உளம் பெரு காதலின் நீளிய ஆய் உன் - அழகிய குளிர்ந்த  திருத்துழாய் விஷயமாக (என்) உள்ளத்திலே வளர்கிற மிக்க வேட்கைபேலால் நீண்டனவாயுள்ளன.

விளக்க உரை

இராப்பொழுது நெடுகிச் செல்லுமாறு கண்டு ஆற்றாமை மீதூர்ந்த தலைவியைப் பற்றித் தாய் இரங்கிக் கூறும் பாசுரம் இது. என் மகளானவள் ஓரிரவு ஏழூழியாய நெடுகும்படியையும் தனது நாயகனான திருமாலின் ரக்ஷகத்வத்தையும் விரோதி நிரஸாரைமாதந்யத்தையும் வாய்மாறாது கூறி அலற்றுகிறாளென்கிறாள் தாய். என்னுடைய காதலுக்கு எப்படி முடிவு இல்லையோ அப்படியே இவ்விரவுகளும் முடிவில்லை யென்கினாள் மகள்- என்பது முன்னடிகளால் தெரிவிக்கப்பட்டது. “நீளியவாயுள என்னும்” என்று அநயவித்துக் கொள்கை. ‘என்னும்’ என்பது இப்பாட்டிற்கு வினைமுற்று என்று சொல்லுகிறாள் என்கை. ‘அளப்பருந் தன்மைய வூழியங்கங்குல்’ என்பதற்கு - “அளக்க வரியதையம் அளந்தவன் திருவடிகளாலும் அளக்கப்போகிறதில்லை; அளக்கலாகில் வந்து தோற்றனோ?’ நாடன்’ என்றது- உலகத்தை கடல் விழுங்காமல் நோக்குமவன் என்ற கருத்தைத் தந்து அவனது ரக்ஷகத்வத்தைப் புலப்படுத்தும். ‘மதுசூதனன்’ என்றது- உலகத்துக் கொடியவரால் நேரும் கலிவைத் தீர்த்துக் கொடுப்பவதென்று துஷ்டநிக்ரஹ ஸாமர்த்தியத்தைப் புலப்படுத்தும். ஊழியங்கங்குல்- “கங்குலுக்கு அழகாவது- கற்பத்திலும் நெடிதாயிருக்கை ‘அம்’ சசியையுமாம். நெடுகிச் செல்லுகின்ற கங்குலைக் குறுக்குதலோ, அல்லது எம்பெருமானைக் கூட்டுதலோ இண்டத்தொன்று செய்யமாட்டாமையால் தாய் ‘வல்வினையேன்’ என்று தன்னைத்தானே வெறுத்துக் கூறுகின்றாளென்க.

English Translation

Alas, the sinner that I am! My daughter with a soft winsome smile, coral Hps and broad breasts, laments. "This long as on aeon night, impossible to measure, stretches infinitely by my craving for the cool Tulasi of the lord Madhusudana. but alas! he is the rule of the Ocean-girdled Earth".

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்