விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மட நெஞ்சம் என்றும் தமது என்றும்,*  ஓர் கருமம் கருதி- 
    விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும்,*  அப்பொன்பெயரோன்-
    தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக்கீழ் விட*  போய்- 
    திட நெஞ்சம் ஆய்,*  எம்மை நீத்து இன்றுதாறும் திரிகின்றதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மடம் நெஞ்சம் என்றும் - பேதைமையை யுடைய மனமென்று எண்ணியும்
தமது என்றும் - நமக்கு அந்தரங்கமானதென்று எண்ணியும்
ஓர் கருமம் கருதி - ஒரு காரியத்தை யுத்தேசித்து
நெஞ்சைவிட உற்றார் - மனத்தைத் தூதுபோக விடத் துணிந்தவர்
விடவோ அமையும் - அத்துணிவை விட்டொழிதல் தகுதி;

விளக்க உரை

நெஞ்சைத் தூதுவிட்ட நாயகி அது மீண்டு வருதலின்மை கண்டு இரங்கிக் கூறுதல் இது. இப்பாட்டை ஒரு புடை அடியொற்றியே திருவரங்கக்கலம்பகத்தில் “நீரிருக்க மட மங்கைமீர்! கிளிகள் தாமிருக்க மதுகரமெலாம் நிறைந்திருக்க மடவன்னமுள்ள நிரையாயிருக்க வுரையாமல் யான், ஆரிருக்கிலு மென்னெஞ்ச மல்லதொரு வஞ்சமற்ற துணையில்லையென்றாதரத்தினோடு தூதுவிட்டபிழை யாரிடத்துரை செய்தாறுவேன், சீரிருக்கு மறை முடிவுதேரியே திருவரங்கரை வணங்கியே திருத்துழாய்தரில் விரும்பியே கொடுதிரும்பியே வருதலின்றியே, வாரிருக்கு முலை மலர்மடந்தை யுறைமார்பிலே பெரிய தோளிலே மயங்கியின்புற முயங்கியென்னையு மறந்து தன்னைமறந்ததே” என்ற செய்யுள் அவதரித்ததென்க. மேகம், கிளி, வண்டு, அன்னம், தோழி முதலியோரைத் தூதுவிடலாமாயிருக்கச் செய்தேயும், கபடமும் வஞ்சனையுமில்லாததென்றும், நம்முடைய அந்த கரணமென்றும் ‘நெஞ்சை யொளித்தொரு வஞ்சகமில்லை’ என்றும் இவை முதலிய காரணங்களை ஆலோசித்து மற்றையோரைத் தூது விடுவதிற் காட்டிலும் நெஞ்சைத் தூது விடுவது உசிதம் என்று கருதி அதனை ஒரு காரியத்தின் பொருட்டு ஓரிடத்துத் தூதுவிடத் துணிந்தவரெல்லோரும் அத் துணிவை விட்டொழிவதே தகுதி; ஏனென்றால், எமது நாயகரிடத்து யாம் முன்பு தூதுவிட்ட நெஞ்சம் இதுவரையிலும் திரும்பி வராதவளவேயன்றி எனக்குந்தனக்குமுள்ள ஸம்பந்தத்தையும், எமது நிலைமையையும் சிந்திப்பதுஞ் செய்யாமல் வன்மைப்பட்டு அவர் பின்னேயே ஸஞ்சரித்தார்க்கு ஒருறுதிமொழி கூறினானென்க.

English Translation

Those who plan an action thinking they have an obedient heart that will do as they bid, may as well give up their plans, I sent my heart to the feet of the lord who tore the steely heart of the Asura Hiranya. Alas, he-my heart –has remained there firmly and never once returned to me, to date.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்