விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெருங் கேழலார் தம்*  பெருங் கண் மலர்ப் புண்டரீகம்*  நம் மேல்-
    ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம்,*  ஒருவர் நம் போல்-
    வருங் கேழ்பவர் உளரே? தொல்லை வாழியம் சூழ் பிறப்பு*
    மருங்கே வரப் பெறுமே,*  சொல்லு வாழி மட நெஞ்சமே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெருகேழலார் - (பிரள வெள்ளத்திலழுந்தின பூமியை யெடுப்பதற்கு) மஹாவராஹரூயானவனர்
இ அகாலம் - (ரக்ஷிப்பதற்கு) எளியதல்லாத இக்காலத்தில்
தம் - தம்முடைய
பெரு கண் மலர் புண்டரீகம் - பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை
நம்மேல் - நம் பக்கலில்

விளக்க உரை

நாயகி நாயகனுடைய நீரிடை யுதவியை நினைத்துரைத்த பாசுரம் இது. நாயகனைப் பிரிந்து நாயகியானவள் அவனையே இடைவிடாது சிந்தனை செய்து கொண்டு நீண்ட காலம் வருத்தப்படா நிற்கையில், அவளது மனம் (நல்வழி. 28) “எண்பது கோடி நினைந்தெண்ணுவன” என்றபடி அவன் முன்பு செய்த உதவியையும் அவனோடு தனக்குள்ள ஸம்பந்தத்தையும் மறந்து அவன் இரக்கமற்றவன், ஈரநெஞ்சு இனநெஞ்சு அற்றவன்’ என்று சொல்லி அவனது கொடுமையையே பாராட்டி வெறுக்கப்புக, அந்த நெஞ்சத்தை முன்னிலைப்படுத்தித் தலைவி ‘நாம் முன்பு நீர்நிலையில் விளையாடச் சென்றபோது பெரு வெள்ளத்தில் அகப்பட்டு ஆழ்ந்து முடிந்துபோகவிருக்கும் தருணத்தில் அவர் தமது அபாயத்தைக் கருதாது துணிந்து வந்து இறங்கி நம்மை யெடுத்துக் கரைமேல்விட்டு உயிர்காத்தவ ரல்லரோ?’ என்றும், ‘இப்படிப்பட்ட ப்ராபதி அவரோடு வேறு யாவர்க்கு சேர்ந்தது?’ என்றும், ‘செய்ததற்கு முன்னமே அவரோடு நாம் இயற்கைப் புணர்ச்சி பெற்றோமன்றோ’ என்றும் பழைய ஸம்பந்தங்களையெடுத்துச் சொல்லி மனத்தைத் திருப்புதல் ஒரு கிளவித் துறையாகவுள்ளது, அத்துறையில் அமைந்த பரசுரம் இது என்னலாம்.

English Translation

Live, O Frail Heart of mine! Tell me, The big boar-lord has turned his lotus eyes on us and made us live through many bad times. Is there anyone with such a long association as we who know him form yore? Can future births ever accost us?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்