விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துழா நெடும் சூழ் இருள் என்று,*  தம் தண் தார் அது பெயரா- 
    எழா நெடு ஊழி*  எழுந்த இக் காலத்தும்,*  ஈங்கு இவளோ-
    வழா நெடுந் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ!*  இலங்கைக்-
    குழா நெடு மாடம்,*  இடித்த பிரானார் கொடுமைகளே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குழாம் - கூட்டமான
நெடுமாடம் - பெரிய மாளிகைகளை
இடித்த - (தம் சேனையைக் கொண்டு இடித்துத் தள்ளின
பிரனார் - தலைவருடைய
கொடுமைகளே - கொடுந்தன்மைகள் இருந்தபடி என்னே!.

விளக்க உரை

தோழியானவள் நாயகனுடைய கொடுமையைக் கூறும் பாசுரமிது. கீழ்ப்பாட்டில் சந்தியா காலமும் வாடையும் ஹிம்ஸித்தவாறு சொல்லிற்று; அதற்குமேல் இருள் வந்து தோன்றிற்று. வாடையும் இராத்திரியும் ‘நான் முன்னே அழிக்கிறேன். நான் முன்னே அழிகிறேன் என்று சொல்வனபோல வந்து நவிகிறபடி. ஒரு ராத்ரிதானே பல யுகங்களாகத் தோன்றி வருத்தத்தை மிகுவிக்கிற இக்காலத்திலும் இவளது தன்மையை அறிந்து வைத்தும் இரக்கங்கொண்டு வந்து உதவாதவர் மிகக் கொடியவர் என்கிறாள். அம்மனோ = ஐயோ! என்பதுபோல; கொடுமைக்கு அஞ்சிக் கூறிய வார்த்தை பிரித்து தனியே நிற்கின்ற இத்தலைவிக்கு இருட் பொழுது நெடிதாகு மென்றும், இவள் பிரிவு பொறுக்கமாட்டாத தன்மையையுடையவனென்றும், திருத்துழாய் மாலையையாகிலும் பெற்றால் ஒருவாறு தரிக்கலாமென்று அதனையே விடாது வாய் பிதற்றும்படி ஆற்றாமை விஞ்சியதென்றும், அவ்வாற்றாமை வேறெரு விதத்தாலும் தணியாதென்றும் இங்ஙனம் இங்குகைக்குப் பல காரணங்களிருக்க, இவை கண்டு இரங்காமை தனித்தனியே கொடுமை என்பது தோன்ற, ‘கொடுமைகள், எனப்பன்மையாகக் கூறிற்று. முன்பு ஒரு பிராட்டியின் ஆற்றாமைக்கு இரங்கி அது தீர்ப்பதற்காக இலங்கையையழித்து உதவினர். இப்பொழுது அவ்வியல்புமாறி இவள் கிறத்துக் கொடியான்படி எங்ஙனே! யென்பான் ‘இலங்கைக்குழ நெடுமாட்மிடித்த பிரானார் கொடுமைகளே!’ என்றாள். திருவரங்கக் கலப்பகத்தில் “கடல் வழிவிட நிசிசரர் பொடிபட விருகண் சீறி, வடகயிலையிலெழுவிடை தழுவியது மறந்தாரோ, அடலராலமளியிலறிதுயிலமரு மாங்கேசர், இடர்கெட வருகிலர் முருகலர் துளவுமிரங்காரே” - என்றது இங்கு அறியத்தக்கது. அன்றி, அப்பொழுது பிராட்டி பக்கல் இரக்கத்தாலன்று இலங்கையை யழித்தது; துஷ்ட நிக்ரஹஞ் செய்து தமது ப்ரபுத்வத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டாகவே யென்பது தோன்ற இங்ஙனங் கூறினாளுமாம்.

English Translation

The lord who destroyed the fortressed Lanka does not give his coal-Tulasi garland, This night of darkness stretches into eternity. His heart does not move to pity saying, "Oh, this girl is suffering this is no place for her to be", Alas, the terrible ways!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்