விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா!*  நீ பொய்கை புக்கு* 
    நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்*  நான் உயிர் வாழ்ந்திருந்தேன்*
    என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்?*  ஏதும் ஓர் அச்சம் இல்லை* 
    கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்*  காயாம்பூ வண்ணம் கொண்டாய்!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம் சுடர் - அழகிய ஒளியையுடைய;
ஆழி  - திருவாழியாழ்வானை;
கை அகத்து - திருக்கையிலே;
ஏந்தும் - தரியாநின்றுள்ள;
அழகா - அழகப்பிரானே;

விளக்க உரை

முதலடியில் ‘உன்’ என்றது-வார்த்தைப்பாடு; பொருளில்லை. கண்ணபிரானே! நீ அன்றொருகால் காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட, அவன் தன் உடலாலே உன்னைகட்ட அதை உதறிப்பொகட்டு அவனுச்சியின் மீதேறி அவன் வாலைப்பிடித்துக் கொண்டு நின்று திளைத்து அவன் வாயாலே ரத்தம் கக்கும்படி ஆடி இப்படியாய்க் கொண்டு அந்யோந்யம் பிணங்கினபோது நான் உயிர்தரித்திருக்கப் பட்டபாடு பகவானறியும்; நீயோவென்றால் இறையுமஞ்சுகிறிலை; உன்னைக்கொல்ல ஸமயம் பார்த்திருக்கின்ற கம்ஸன் தன் மனோரதம் நிறைவேறப்பெற்று மகிழும்படியாகக் காட்டுக்குச் சென்று கண்டவிடமெங்குந் திரியாநின்றாய்; இப்படிகளை நினைத்தால் என்வயிறு குழம்புகின்றது; இப்படி என்குடலைக் குழப்புவதனால் நீ பெறும்போது என்னோ? அறிகிலேன் என்கிறாள். [காயாம்பூ இத்யாதி.] இவ்வடியின் பெருமயை நினைக்கிறாயில்லையே! என்றவாறு. “வேண்டினபடியாகிறது, இவ்வடிவுக்கு ஒரு வைகல்யம் வாராமல் பிழைக்கப் பெற்றேனே யென்கை” என்பது ஜீயருரை. மறுக்கினாய் என்பதற்கு ‘மறுக்கின்றாய்’ என்றும், செய்தாய் என்பதற்குச் ‘செய்கின்றாய்’ என்றும் நிகழ்காலப்பொருள் கொள்ளல் தகும்; இது வழுவமைதியின் பாற்படும்: “விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும், பிறழவும் பெறூஉமுக் காலமு மேற்புழி”” என்றார் நன்னூலார்.

English Translation

O, Beautiful One bear in a radiant conch in your hand! When you entered the lake and wrestled with the venom-spitting serpent, I lived through it; my stomach turned. Why did you do it? You have no fear. O Kaya-hued Lord, you go on doing things that please Kamsa’s heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்