விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உளன்கண்டாய் நல்நெஞ்சே*  உத்தமன் என்றும் 
    உளன்கண்டாய்*  உள்ளுவார் உள்ளத்து உளன்கண்டாய்*
    தன் ஒப்பான் தான்ஆய்*  உளன்காண் தமியேற்கும்* 
    என் ஒப்பார்க்கு ஈசன் இமை.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உள்ளுவார் உள்ளத்து - ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய் - நித்யவாஸம் பண்ணுமவன் காண்
என் ஒப்பார்க்கு - என்னைப்போலே உபாய சூந்யராயிருப்பவர்கட்கும்
தான் ஈசன் ஆய் உளன் காண் - தானே நிர்வாஷகனாயிருக்கிறான் காண்
இமை - இதனை அறி.

விளக்க உரை

தன் ஒப்பான் என்ற கருதியின்படி ஒத்தாரும் மிக்காருமிலனாதலால் தனக்குத்தானே ஒப்பாமவன். இங்ஙனங் கூறுதலே அநந்வயாலங்காரமென்பர். தமியேற்கு – தமியன் என்றால் தனிப்பட்டவன் என்று பொருள். அகிஞ்சநனான எனக்கு என்கை. ‘நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்‘ என்கிறபடியே ஒரு கைம்முதலுமில்லாதவர்க்கு எல்லாக் கைம்முதலும் எம்பெருமான்தானேயா யிருப்பனென்க. என்னொப்பார்க்கு – மற்றுள்ள ஆழ்வார்களையுங் கூட்டிக்கொள்ளுகிறபடி.

English Translation

See, O Heart! The supreme Lord exists. Always he exists. In the hearts of devotees, he exists, The Lord without a peer appears before devotees like me on his own know it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்