விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இடம்ஆவது*  என்நெஞ்சம் இன்றெல்லாம்*  பண்டு 
    படநாகணை*  நெடியமாற்கு*  திடமாக
    வையேன்*  மதிசூடி தன்னோடு*  அயனைநான் 
    வையேன்*  ஆட்செய்யேன் வலம்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் நெஞ்சம் - எனது நெஞ்சமாகும்
மதி சூடி தன்னோடு - பிறைச்சந்திரனத் தலையிலே சூடியிருக்கிற ருத்ரனையும்
அயனை - பிரமனையும்
திடம் ஆக - பரம்பொருளாக
வையேன் - மனத்திற்கொள்ள மாட்டேன்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “யாதானும் வல்லவா சிந்தித்திருப்பேற்கு வைகுந்தத்தில்லையோ சொல்லீரிடம்“ என்றவாறே, எம்பெருமான், ‘நம்முடைய இருப்பிடத்தை இவர் ஆசைப்படுகையாவதென். இவருடைய நெஞ்சமன்றோ நமக்கு உத்தேச்யம்‘ என்று கொண்டு இவர்தம் திருவுள்ளத்தே வந்து புகுந்தருளினான், அதனை யருளிச்செய்கிறார். “சென்றாற் குடையா மிருந்தாற் சிங்காசனமாம்“ என்கிறபடியே ஸகலவித கைங்கரியங்களுக்கும் உரியவனான திருவனந்தாழ்வான் மேல் திருமால் சாய்ந்தருளினது இற்றைக்கு முன்பே, இன்று முதலாக மேலுள்ள காலமெல்லாம் எனது நெஞ்சையே தனக்கு இடமாக அமைத்துக்கொண்டானாயிற்று. இப்படி அவன்றானேவந்து விரும்பப்பெற்ற பாக்யம் வாய்ந்த அடியேன் நளிர்மதிச் சடையனையாவது நான்முகக்கடவுளையாவது நெஞ்சிற் கொள்ளவும் வணங்கி வழிபடவும் இனி ப்ராப்தி ஏது? எம்பெருமானை அண்டைகொண்டமிடுக்கு எனக்குள்ளதன்றோ? என்கிறார். நாக + அணை, நாகவணை என்றாகத்தக்கது, “நாகணை“ என மருவிற்று. மதிசூடி –தக்ஷமுனிவனது சாபத்தால் க்ஷயமடைபவனாய்க் கலைகுறைந்து வந்து சரணடந்த சந்திரனை முடியின்மீது கொண்டு வரமளித்துப் பாதுகாத்தமையால் சிவன் மதிசூடியாயினன். இப்பாட்டில் ‘வையேன்‘ என்பது இரண்டிடத்து வந்துள்ளது, ஒன்று எதிர்மறை வினைமுற்று, மற்றொன்று உடன்பாட்டு வினையாலணையம் பெயர் வை-கூர்மை, கூர்மை தங்கிய மதியுடையேன் என்றவாறு. தேவதாந்தரப் பற்றையொழித்து ஸ்ரீமந்நாராயணனையே பரதெய்வமாகக் கடைப்பிடித்த தமது மதியைத் தாம் சிறப்பித்துக் கூறுதல் ஏற்குமென்க. ஆட்செய்யேன் வலம் –ஆட்செய்யேன், வலஞ்செய்யேன் என்று யோஜித்து, (அவர்களைப்) பிரதக்ஷிணம் செய்யமாட்டேன் என்றுரைக்கவுமாம்.

English Translation

Earlier, the adorable lord used to recline on a hooded serpent. Now a days he resides in my heart. For the firm one that I am, I shall never contemplate on the crescent-headed Siva or the lotus-born Brahma, nor circumambulate them.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்