விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மேல் நான்முகன்*  அரனைஇட்ட விடுசாபம்* 
    தான் நாரணன் ஒழித்தான்*  தாரகையுள்*  வானோர்
    பெருமானை*  ஏத்தாத பேய்காள்*  பிறக்கும் 
    கருமாயம் பேசில் கதை.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாரகையுள் - இந்நிலவுலகத்தில் (உள்ளாரெல்லாரு மறிய)
நாராயணன்தான் - எம்பெருமானே
ஒழித்தான் - போக்கிருயளினன், (அப்படிப்பட்ட)
வானோர் பெருமானை - நித்யஸூரி நாதனான ஸ்ரீமந்நாராயணனை
ஏத்தாத - வாய்கொண்டு

விளக்க உரை

எம்பெருமானுடைய பெருமை நாடு நகரமும் நன்கு அறிந்ததாயிருந்தும் அவனை ஏத்தமாட்டாத பாவிகள் எவ்வளவோ கஷ்டங்களை அநுபவிக்க வுரியவர்கள் என்கிறார். ஒரு காலத்தில் பரமசிவன் தன்னைப் போலவே பிரமனும் ஐந்து தலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு இடமாயிருக்கின்றதென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளியொடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன் கையில் ஒட்டிக் கொள்ளுதலும், அவன் “இதற்கு என் செய்வது?“ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும் “இப்பாவந் தொலையப் பிச்சை யெடுக்கவேண்டும், என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்“ என்று உரைக்க, சிவபிரான் பலகாலம் பல தலங்களிலுஞ்சென்று பிச்சையேற்றுக் கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நிறையாது நீங்காதாக பின்பு ஒருநாள் பதரிகாச்ரம்தை யடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது அப்பெருமான் “அக்ஷயம்“ என்று பிகைஷயிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது – என்பதே நான் முகனரனையிட்ட விடு சாபம் நாரணணொழித்த வரலாறு. குரு பாதகத்தைப் போக்கிச் சிவனையும் உய்யக்கொள்ளவல்ல பரதேவதை ஸ்ரீமந்நாராயணன் என்பதை அறிகின்றிலவே இப்பேய்கள் என்று வருந்துகிறார். பிறக்குங் கருமாயம் பேசில் கதை – எம்பெருமானுடைய பெருமையறிந்து அவனை ஏத்தினீர்களாகில் உஜ்ஜீவித்துப் போவீர்கள், இல்லையேல், மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து கர்ப்பப்பைகளில் நீங்கள் படநேரும் துன்பங்கள் மஹாபாரதம்போலே பெரிய கதைப்புத்தகமாக எழுதிவைக்கத் தக்கதாகும் என்றவாறு. முதலடியில், விடுசாபம் என்றது முழுச்சொல், “விடு“ என்பதற்குத் தனியே பொருளில்லை, அதை ஒரு உபஸர்க்கம் பொலுக் கொள்க. சாபம் – அநுபவித்தே தீரவேண்டிய பாவம்.

English Translation

The curse of Brahma upon Siva was lifted by Narayana. O Fiendish people of the Earth! You do not praise the lord og gods! The travails of your birth are legion.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்