விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நிலைமன்னும் என்நெஞ்சம்*  அந்நான்று*  தேவர் 
    தலைமன்னர்*  தாமே மாற்றாக*  பலமன்னர்
    போர்மாள*  வெம்கதிரோன் மாய பொழில்மறைய* 
    தேர்ஆழியால் மறைத்தாரால். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேவர் தலை மன்னர் தாமே - தேவாதிதேவனான தானே
மாற்று ஆக - எதிரியாயிருந்து கொண்டு
பல மன்னர் - பல அரசர்கள்
போர் - யுத்தக்களத்தில்
மாள - மடிந்து

விளக்க உரை

“நீ த்வேஷிப்பதனால் எனக்கு சத்துருவே, ஆனதுபற்றியே உன்னிடம் நான் உண்ணவரவில்லை) என்றான். ஆகவே, ஆச்ரிதர்களுடைய பகைவர்களைத் தன்னுடைய பகைவர்களாகவே கொள்ளும் எம்பெருனுடைய அபிஸந்தியை அறிந்து இங்கு “தாமே மாற்றாக“ என்றருளிச் செய்தாரென்க. * மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றம் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்ததன் சிலைவளையத் திண்டோமேல் முன்னின்றதுபற்றிப் “பலமன்னர் போர்மாள“ என்றருளிச் செய்யப்பட்டது. வெங்கதிரோன்மாயப் பொழில்மறையத் தேராழியால் மறைத்த வரலாறு வருமாறு – அர்ஜுநன் பதின்மூன்றாநாட் போரில் தன் மகனான அபிமந்யுவைக் கொன்ற ஜயத்ரதனை மறுநாள் ஸூர்யன் அஸ்தமிப்பதற்கு முன்னே கொல்வதாகப் பல பிரதிஜ்ஞைகள் செய்ய, அது நிறைவேறக் கூடாதென்று அந்த ஜயத்ரதனை எதிரிகளால் உட்புக முடியாதபடியாக வ்யூஹத்திலே நிறுத்திக் காப்பாற்றிக் கொண்டிருந்த ராஜாக்கள் முன்னே, ஸ்ரீகிருஷ்ணன் பகல் நாழிகை முப்பதும் சென்றதாகத் தோன்றும்படி, நினைவறிந்து காரியஞ்செய்யும் தனது சக்கராயுதத்தைக் கொண்டு ஸூர்யனை மறைக்க, “ஆதித்யன் அஸ்தமித்தான், இனிநமக்குப் பிராணபயமில்லை, அர்ஜுநன் பிரதிஜ்ஞை செய்திருக்கிறபடியே அக்நி ப்ரவேசம் செய்யப்போவதைக் கண்டு களிப்போம்“ என்றெண்ணி ஜயத்ரதன் வெளிப்பட்டு நின்றவளவிலே கண்ணபிரான் ஸுதர்ச நாழ்வானை மீட்டுக்கொள்ள, ஸூர்யன் இன்னும் அஸ்தமிக்கவில்லையென்று உணர்ந்துகொண்ட அர்ஜுநன் உடனே தனது அம்பைக் கொண்டு அந்த ஜயத்ரதனைத் தலையறுத்துவிட்டனன் என்பதாம். கோடிஸூர்ய ப்ரகாசான திருவாழியைக் கொண்டு ஸூர்யனை மறைத்தல் எங்ஙனம் கூடுமெனின், ஸூர்யனுடைய ஒளி கண்ணாலே காணலாம்படி அளவுபட்டிருத்தலால் இருட்டைப் போக்கும், அப்படியல்லாமல் திருச்சக்கரத்தினொளி நேராகக் கண்கொண்டு பார்க்கமுடியாதபடி அளவுபடாத மிக்க பேரொளியைக் கொண்டுள்ளதனால் பளபளத்துக் கண்களை இருளப் பண்ணுமெனச் சமாதானங் கூறுவர் பெரியார், மற்றுஞ் சில வகையான ஸமாதானங்களும் கூறுவாருளர்.

English Translation

When the Lord of gods himself fought a war against the mighty kings of yore, killing them in battle, he hid the Sun with a chariot wheel. My hear finds refuge of him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்