விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இன்றுஆக*  நாளையேஆக*  இனிச்சிறிது 
    நின்றுஆக*  நின்அருள் என் பாலதே*  நன்றாக
    நான் உன்னைஅன்றி*  இலேன்கண்டாய்*  நாரணனே 
    நீஎன்னை அன்றிஇலை.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாளையே ஆக - நாளைக்காகவுமாம்
இனி சிறிது நின்று ஆக - இன்னம் சிறிது காலம் கழிந்தாகவுமாம் (என்றைக்கானாலும்)
நின் அருள் - உன்னுடைய கிருபை
என் பாலதே - என்னையே விஷயமாக வுடையதாகும்
நன்று ஆக - நிச்சயமாக

விளக்க உரை

ஆழ்வீர்! மதாந்தரஸ்தர்களை யெல்லாம் ஈனவரேயென்று இழித்துச் சொன்னீர், உமக்குண்டான ஏற்றம் யாது? என்று எம்பெருமான் கேட்க, என்னுடைய ஏற்றம் உனக்குத் தெரியாதோ பிரானே! “உன்னையொழிய எனக்குச் செல்லாது, என்னையொழிய உனக்குச் செல்லாது“ என்னும்படியான உறவை யுணர்ந்து ஸர்வகாலமும் உன்னுடைய திருவருளுக்குப் பரிபூர்ண பாத்ரமாயிருக்கப்பெற்ற வென்னுடைய ஏற்றம் அறியாயோ? என்கிறார் போலும். பெருமானே! உன்னுடைய திருவருள் என்மேல் ஏறிப்பாய வேண்டியதேயன்றி வேறொருவயும் விஷயமாக வுடையதன்று, உன்னுடைய அருளுக்கு நானே இலக்கு, என்னுடைய வேண்டுகோளுக்கு உன்னருளே இலக்கு. இன்றைக்கோ நாளைக்கோ, அன்றி இன்னமும் சிலகாலம் கடந்தபின்போ என்றைக்கானாலும் உன்னருள் என்மேல் ஏறிப்பாய்ந்தே தீரக்கடவது என்கிற அத்யவஸாயன் எனக்குத் திடமாகவுள்ளது. இங்ஙனே நான் சொல்லுவதற்கு யாதுகாரணமென்கிறாயோ? சொல்லுகேன் கேளாய், நான் உன்னையன்றியிலேன் நீ யென்னை யன்றியிலே – “நம்முடைய அருளை யாரிடத்து உபயோகிக்கலாம்!“ என்று நீ தயநீயரைத் தேடியிராநின்றாய், “நமக்கு எம்பெருமான் அருள்புரிவானோ? என்று நான் உன் தயையைத் தேடியிராநின்றேன், உன்னையொழிய எனக்குப் புகலில்லை, என்னையொழிய உனக்குப் புகலிலே. ஆகவே, நின்னருள் என்பாலதே. “*******” என்ற ஸ்தோத்ர்ரத்ந ச்லோகம் இவ்விடத்திற்குச் சார்பாக அநுஸந்திக்க வுரியது. “ நிகரின்றி நின்ற என்னீசதைக்கு நின்னருளின்கணன்றிப் புகலொன்றுமில்லை அருட்குமஃதே புகல்” என்ற அமுதனார் பாசுரமும் காண்க. பின்னடிகட்கு வேறொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம்; நாராயணனே! உன்னை நிரூபிக்கவேண்டில் என்னையிட்டு நிரூபிக்கவேண்டும், என்னை நிருபிக்க வேண்டும், என்னை நிரூபிக்கவேண்டில் உன்னையிட்டு நிரூபிக்கவேண்டும், (அதாவது) “நாராயணன்“ என்றால் நாரங்களுக்கு அயநம் என்றபடி, நாரபதார்த்தங்களில் தாம் சேர்ந்தவராகையாலே தம்மையிட்டு நாராயணனை நிரூபிக்க வேண்டியதாகிறது. தம்மை நிரூபிக்கவேண்டுமானால் பகவச் சேஷத்வத்தையிட்டே அடியானென்று நிரூபிக்கவேண்டியிருப்பதால் நாராயணனையிட்டுத் தம்மை நிரூபிக்க வேண்டியதாகிறது. சேஷசேஷிகளுடைய நிரூபணம் பரஸ்பர ஸாபேக்ஷமாகவே யிருக்குமன்றோ. ஆகவே, சேஷியான உன்னையொழிய எனக்கு ஸத்தையில்லை, சேஷபூதனான என்னையொழிய உனக்கு ஸத்தையில்லை என்றதாயிற்று என்று கொள்ளலாம்.

English Translation

O Lord Narayana! You may grace me today, or tomorrow, or some time later, but your grace is definitely coming. I cannot be without you, Nor can you be without me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்