விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சார்வு நமக்குஎன்றும் சக்கரத்தான்,*  தண்துழாய்த் 
    தார்வாழ்*  வரைமார்பன் தான்முயங்கும்,* - கார்ஆர்ந்த
    வான்அமரும் மின்இமைக்கும்*  வண்தாமரைநெடுங்கண்,* 
    தேன்அமரும் பூமேல் திரு.  (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெடு - நீண்ட
கண் - திருக்கண்களை யுடையளாய்
தேன் அமரும் பூமேல் - தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான
திரு - பெரிய பிராட்டியார்
நமக்கு என்றும் சார்வு - நமக்கு எப்போதும் சரணம்.

விளக்க உரை

“தேனமரும் பூமேல் திரு நமக்கு என்றும் சார்வு“ என்று அந்வயிப்பது. நடுவிலுள்ளவை பிராட்டிக்கு விசேஷணங்கள் “சக்கரத்தான் தண்டுழாய்த்தார்வாழ் வரைமார்பன் தான் முயங்கும்“ என்பது ஒரு விசேஷணம், “காரார்ந்த வானமரும் மின்னிமைக்கும்“ என்பது இரண்டாம் விசேஷணம், “வண் தாமரை நெடுங்கண்“ என்பது மூன்றாம் விசேஷணம். இவளுடைய போக்யதையைக் கண்டு ஒரு நொடிப்பொழுதும் விடமாட்டாமல் எம்பெருமான் இவளை நித்ய ஸம்ச்லேஷம் செய்திருக்கிறானென்பது முதல் விசேஷணத்தின் கருத்து. எம்பெருமானுடைய வைலக்ஷண்யம் சொல்லவேண்டில் “அகலகில்லேளிறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பா!“ என்று பிராட்டிமேல் விழுந்து அநுபவிப்பதாகச் சொல்லுவர்கள், பிராட்டிக்கு வைலக்ஷணயம் சொல்லவேண்டில் இவளை அவன் தான் மேல்விழுந்து அநுபவிப்பதாகச் சொல்லுங்கள் இரண்டு படியும் தகுமிறே. நிலைநின்ற விளங்கமாட்டாத மின்னல்போன்றிராதே நிலைநின்று விளங்குவதொரு விலக்ஷணமான மின்னல்போலே பிரகாசிப்பவளென்கிறது இரண்டாம் விசேஷணம். மின்னல் மேகத்திலே ஜ்வலிக்கும், இவளும் காளமேகத் திருவுருவிலே. வண்தாமரை நெடுங்கண் – ஸ்த்ரீகளின் கண்ணழகை வர்ணிக்குமிடத்து “குவளையங் கண்ணி“ எறும் “கருங்கண்ணி“ என்றும் “அஸிதேக்ஷணா“ என்றும் வர்ணிப்பதே பொருத்தமுடைத்தென்றும் தாமரைமலர் போன்றதாக வருணித்தல் சிறவாதென்றும், அவ்வுவமை புருஷோத்தமானது திருக்கண்ணுக்கே பொருந்துமென்றும் சிலர் சொல்லுவர், அது பொருந்தாது, ‘பத்மாக்ஷி ‘பங்கஜாக்ஷி‘ என்ற விசேஷணங்களும் மஹாகவி நிபந்தங்களில் பெரும்பாலுங் காணாநின்றோம், அன்றியும், ஸ்ரீஸூக்தத்தில் “பத்மாலயே பத்மிநி பத்மஹஸ்தே பத்மப்ரியெ பத்ம தளாயதாக்ஷி“ என்று ஓதப்பட்டிருத்தலால் அதை படியொற்றின வண்டாமரை நெடுங்கண் என்ற இவ்விசேஷணம் மிகப்பொருத்தமானதே யென்க. கண்களின் நீட்சிக்குத் தாமரையிதழ்களும் கருமைக்கு குவளைமலரும் உவமையென்றுணர்க.

English Translation

The discus-wielding Tulasi-garland lord bears the lotus-dame Lakshmi on his wide chest, like a lightning on a dark cloud. She has beautiful lotus eyes, and is seated on a nectar-dripping flower. She is our refuge, today and forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்