விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அவ்வவ் இடம் புக்கு*  அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க்* 
    கொவ்வைக் கனிவாய் கொடுத்துக்*  கூழைமை செய்யாமே*
    எவ்வும் சிலை உடை*  வேடர் கானிடைக் கன்றின் பின்* 
    தெய்வத் தலைவனைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தெய்வம் - தேவர்களுக்கு;
தலைவனை - நிர்வாஹகனான கண்ணனை;
அ அ இடம் புக்கு - (மச்சுமாளிகை முதலான) அவ்வவ்விடங்களில் (ஏகாந்தமாகப்) புகுந்து;
அ ஆயர் பெண்டிர்க்கு - (அவ்வவ்விடங்களிலுள்ள) அவ்விடைப்பெண்களுக்கு;
அணுக்கன் ஆய் - அந்தரங்கனாய்;

விளக்க உரை

கீழ்த்திருமொழியில் ”கேளாராயர் குலத்தவரிப்பழி கெட்டேன் வாழ்வில்லை” என்று சொன்ன யசோதை தானே இப்போது இங்ஙன் சொல்லுகைசேருமாறு எங்ஙனேயெனின்? கண்ணபிரானது பிரிவைப் பொறுக்கமாட்டாமல் ‘அவன் என்னை இவ்வாறு பிரிந்து வருத்துதலுங்காட்டில் இங்குத்தான் நினைத்தபடி தீமை செய்து திரிவானாகில் இத்தனை வருத்தம் எனக்கு விழையாதே! என்று கருதினள் போலும். அணுக்கன் -அணுகியிருப்பவன்; அந்தரங்கமாயிருப்பவன் என்றவாறு கூழைமை செய்கையாவது- ‘உன்னையொழிய வேறொருத்தியையும் அறியமாட்டேன், உன்னைப் பிரிந்தால் க்ஷணமும் தரிக்கமாட்டேன்’ என்றாற்போலச்சொல்லி அவ்வப்பெண்களுக்கே உரியனாய் தோற்றநிற்கை. [எவ்வுஞ்சிலை] எவ்வம் என்றால் துன்பம்; அதனைச் செய்யுஞ்சிலை-எவ்வுஞ்சிலையாம். அன்றிக்கே; ‘ஏவுஞ்சிலை’ என்கிறவிது-எதுகையின்பம் நோக்கி ’எவ்வுஞ்சிலை’ என்று கிடக்கிறதாகக் கொண்டால், ஏ என்று அம்புக்குப் பேராய் அத்தையும் சிலையையுமுடைய என்று பொருளாம். மோனயின்பத்துக்கிணங்க ‘வெவ்வுஞ்சிலையுடை’ என்று பாடமோதி வெவ்விய [தீக்ஷ்ணமான] சிலையையுடைய என்று உரைத்தல் ஒக்குமென்பாருமுளர்.

English Translation

The Lord of gods would go from place to place and secretly give to each cowherd maiden his dark berry lips, and engage her in sweet talk. Instead I sent him after the grazing calves into the bow-wielding hunter’s forest. O, why did I do such a wicked thing?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்