விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிலம்பும் செறிகழலும் சென்றுஇசைப்ப,*  விண்ஆறு 
    அலம்பிய சேவடிபோய்,*  அண்டம் - புலம்பியதோள்*
    எண்திசையும் சூழ*  இடம்போதாது என்கொலோ,*
    வண்துழாய் மால்அளந்த மண்?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அண்டம் போய் - அண்டபித்தியளவும் நீண்டு போனபோது,
புலம்பிய - (அனைவராலும்) துதிக்கத் தக்க
தோள் - திருத்தோள்கள்
எண் திசையும் சூழ - எட்டுத் திசைகளையும் வியாபிக்க
இடம் போதாது - இடம் போராவில்லை,

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் திருமலையின் மூங்கிற்பணைகளின் வளர்த்தியைச் சொன்ன ப்ரஸங்த்தாலே உலகளந்த பெருமானுடைய திருத்தோள்களின் திருவளர்த்தி நினைவுக்குவர, அதனைப் பேசி யநுபவிக்கிறாதில், எம்பெருமானளந்த இப்பூமண்டலம் மிகப்பெரிது என்கிறார்களே, அப்படி பெரிதாக எனக்குத்தோன்ற வில்லை, அவன் உலகளந்த காலத்து எண்டிசையும் விம்மவளர்ந்த திருத்தோள்கள் செருக்குண்ணாமல் விசாலமாக அடங்கியிருப்பதற்று இடம் போதவில்லையே, அப்படியிருக்க, “பெரிது பெரிது புவனம் பெரிது“ என்கிறார்களே, இது என்கொல் என்கிறார். “வண்டுழாய் மாலளந்தமண்“ என்றவிடத்து ‘அளந்த‘ என்பதை ‘அளந்தது‘ என்றதன் குறையாகக் கொண்டும் உரைக்கலாம், வண்டுழாய்மால் மண் அளர்ந்தது என்கொலோ அளப்பதாவது அடியை மாறிமாறியிட்டுச் செய்யவேண்டுவது, திருத்தோள் வளர்த்திக்கே இடம் போரவில்லையென்றால் எம்பெருமான் மண்ணளந்தானென்று எப்படி சொல்லமுடியும்? என்கை.

English Translation

The Lord with the Tulasi garland ralised his one foot into the sky, his ankelts jingling, and Brahma washed the foot with the Akasa-Ganga. His arms stretched out into the elight Quarters. How then did he measure his small Earth?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்