விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நன்மணி மேகலை*  நங்கைமாரொடு நாள்தொறும்* 
    பொன்மணி மேனி*  புழுதியாடித் திரியாமே*
    கல்மணி நின்று அதிர்*  கான்- அதரிடைக் கன்றின்பின்* 
    என் மணிவண்ணனைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் - என் மகனான;
மணிவண்ணனை - நீலமணிபோன்ற வடிவையுடைய கண்ணனை;
நல் - லோகோத்தரமான;
மணி - நவமணிகள் பதித்த;
மேகலை - மேகலையை (அணிந்துள்ள);

விளக்க உரை

என் கண்ணபிரான் தானுகந்த பெண்களோடுகூடித் திருமேனி புழுதிபடியும்படி யதேச்சமாக விளையாடிக்கொண்டு இச்சேரியிலேயே திரிந்து கொண்டிருந்ததைத் தவிர்த்துக் கொடிய காட்டுவழியிலே போகவிட்டேனே பாவியேனென்று பரிதபிக்கின்றான். ’கல்’ என்ற சொல் இலக்கணையால் மலையை உணர்த்திற்று. கண்ணபிரான் காட்டுவழியிற் போம்போது இவன் கன்றுகளை அழைக்கின்ற த்வநியாலும், அதைக் கேட்டு அவை கூப்பாடு போடுகின்ற த்வநியாலும் அருகிலுள்ள மலைகளில் பயங்கரமான பிரதித்வநி கிளம்புமே! என்று வழியின் கொடுமையை நினைத்து நோகின்றாளென்க.

English Translation

My gem-hued Lord would room the streets with the gem-girdled maidens everyday, gathering dust on his golden countenance. Instead I sent him after the grazing calves, along the echoing forest path. O, why did I do such a wicked thing?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்