விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அரண்ஆம் நமக்குஎன்றும்*  ஆழி வலவன் 
    முரன்நாள் வலம்சுழிந்த மொய்ம்பன்,* - சரண்ஆமேல்
    ஏதுகதி ஏதுநிலை*  ஏதுபிறப்பு என்னாதே,* 
    ஓதுகதி மாயனையே ஓர்த்து.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆழி - திருவாழியாழ்வானை
வலவன் - வலத்திருக்கையிலுடையவனும்
முரன் - முராஸுரனுடைய
நாள் - ஆயுளையும்
வலம் - வலிமையையும்

விளக்க உரை

எம்பெருமான் ஸர்வரக்ஷகனென்று பேர் பெற்றாலும் அவனுடைய ரக்ஷகத்வம் எல்லாவிடத்திலும் எக்காலத்தில் புகமாட்டாது, தம்மை ரக்ஷித்துக்கொள்வதில் தாமே முயற்சிசெய்து கொள்பவர்கள் எத்தனையோ பேர்களுண்டே; அப்படிப்பட்டவர்களிடத்தில் அவன் தனது ரக்ஷகத்வத்தைச் செலுத்தியருளான். ஏனெனில், இருகையும் விட்டு ‘நீயே சரண்‘ என்று ஸர்வபாரங்களையும் தன்மேலேறிட்டு, தம் தலையாலே ஒரு முயற்சியும் செய்யகில்லாத ஸ்வரூபஜ்ஞாநிகளையேதான் ரக்ஷித்தருள்வன். “இருகையும் விட்டேனோ த்ரௌபதியைப்போலே“ என்னும்படியாக அவள் ஒரு கையாலே துகிலைப்பற்றிக்கொண்டு ஸ்வப்ரயத்ந நிஷ்டையாயிருந்தவரையில் அவளுடைய ரக்ஷணத்திலே கண்ணபிரான் திருவுள்ளம் செலுத்திற்றிலன். ஸ்ரீகஜேந்திராழ்வான் ஸ்வரக்ஷணத்தில் ஸ்வப்ரவ்ருத்தி பண்ணிக்கொண்டிருந்த வரையில் ஸ்ரீமந்நாராயணன் அவனுடைய ரக்ஷணத்தைத் திருவுள்ளம் பற்றிற்றிலன். இப்படிப்பட்ட உதாஹரணங்கள் பலபல காணலாம். ஆகவே நம்முடைய ரக்ஷணத்தில் நாமும் ஒரு கை பார்த்போம் என்றிருக்கும்வரையில் எம்பெருமான் உதாஸீநனாகவே இருந்திருவான். இந்த ஸத்ஸம்ப்ரதாயப் பொருளை நெஞ்சில் தேக்கிக்கொண்டு இப்பாசுரத்தின் கருத்தை ஊன்றிப் பார்த்ததால் நன்று விளங்கும். ஆழிவலவன் சரண்ஆமேல் நமக்கு என்றும் அரணாம் –எம்பெருமான் நமக்கு ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில் எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே யிருப்பன், என்றால் இதன் கருத்து என்னவென்று நோக்கவேணும். நம்மை நாம் ரக்ஷித்துக்கொள்ள முயலுமளவில் அவன் நமக்கு ரக்ஷகனாக அமையான்; ஆதலால் நம்முடைய ரக்ஷணத்தில் நாம் முயல்வதை விட்டிட்டு அவனுடைய ரக்ஷகத்வத்திற்கு அவகாசம் கொடுப்போமாகில் அவன் “என்னுடம்பிலழுக்கை நானே போக்கிக்கொள்ளேனோ“ என்கிறபடியே எக்காலத்திலும் ரக்ஷண ஜாகரூகனா யிருந்தருள்வன் என்றவாறு.

English Translation

Repose your fatih in him, O Heart! Did he not, -out krishna, -go with his discuss, and kill the Asura Mura, to free the princesses? Having surrendered unto him, do not ask, "What is our fate?", "Who is our refuge?", "When is rebirth?" Wait for the wonder-Lord's grace.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்