விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குன்றுஒன்றின்ஆய*  குறமகளிர் கோல்வளைக்கை,* 
    சென்று விளையாடும் தீம்கழைபோய்,* - வென்று
    விளங்குமதி கோள்விடுக்கும்*  வேங்கடமே,*  மேலை 
    இளங்குமரர் கோமான் இடம்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குற மகளிர் - குறத்திகள்
கோல் வளை கை - அழகிய வளைகளணிந்த கைகளினாலே
சென்று - மேலேறி
விளையாடும் - விளையாடா நிற்கப் பெற
தீம் கழை - அழகிய மூங்கில்கள்

விளக்க உரை

திருமலையில் வளர்கின்ற மூங்கில்கள் சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்றன வென்பதை ஒரு அதிசயோக்தியினால் கூறுகின்றார். குன்றொன்றினாய குறமகளிர் – திருமலையை விட்டு ஒரு நொடிப்பொழுது கீழிழிந்தாலும் குடிப்பழியாம் என்று திருமலையை விடாதே அங்கே நித்தியவாஸம் பண்ணுகின்ற குறத்திகள் அவர்கள் ஊஞ்சலாடுகை முதலான விளையாடல்களுக்காக மூங்கில் மரங்களிலே யேறியிருப்ப துண்டாகையாலே “குறமகளிர் கோல்வளைக்கை சென்று விளாயாடுந் தீங்கழை“ எனப்பட்டது. அப்படிப்பட்ட மூங்கில்களானவை, சந்திரனை கர்ஹிக்கின்ற ராஹுவைக்குத்தி அப்புறப்படுத்தி அச்சந்திரனை மகிழ்விக்கின்றனவாம். இங்ஙனே ஒக்கமுடைத்தான திருமலை நித்ய ஸூரிநாதன் வாழுமிடம். இப்பாட்டுக்கு மற்றும் பலவகையாகப் பொருள்கூறுவர், விளையாடுகின்ற குறத்திகளின் கோல்வளைக்கையானது சென்று நல்ல மூங்கிற்செறிவை நீக்கி, சந்திரன் இங்குப் புகுரப்பெறாமையால் பெற்றிருந்த இடரை நீக்கும் என்றுமாம். அன்றியே குறத்திகளின் வளைகளின் ஒளியானது சந்திரனொளி புகுரப்பெறாத மூங்கிலிருளை அகற்றி வெளியாக்கி, சந்திரன் மறுவையும் போக்கும் என்றுமாம்.

English Translation

The youthful lord, king of celestials, resides on the hill where resident gypsy girls with Bamboo-bangled hands climb over fall Bamboo shoots to play, and tree the moon tangled in the thickets That hill is venkatam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்