விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாழும் வகைஅறிந்தேன்*  மைபோல் நெடுவரைவாய்த்,* 
    தாழும் அருவிபோல் தார்கிடப்ப,* - சூழும்
    திருமா மணிவண்ணன்*  செங்கண்மால்,*  எங்கள் 
    பெருமான்*  அடிசேரப் பெற்று.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் கண்மால் - செந்தாமரை போன்ற திருக்கண்களையுடைய பெரியோனுமான
எங்கள் பெருமான் - எம்பெருமானுடைய
அடி - திருவடிகளை
சேர பெற்று - அஞகப் பெற்றதனால்
வாழும் வகை அறிந்தேன் - உஜ்ஜீவிக்கும் வழி தெரிந்தவனானேன்.

விளக்க உரை

எம்பெருமானுடைய கரிய திருமேனியிலே செந்திறமான ரத்னங்களால் அமைந்த ஹாரங்கள் சாத்தப்பட்டிருப்பதானது அஞ்சனகிரியிலே அருவிகள் தாழ விழிந்தாற்போலே யிருக்கின்றனவாம். அவ்வழகிலே யீடுபட்டு அத்திருமார்பை ஒரு நொடிப்பொழுதும் விடமாட்டாதே சூழ்ந்து கிடக்கிறாள் பெரிய பிராட்டி, அப்படிப்பட்ட செங்கண்மாலுடைய திருவடிகளை நான் சேர பெற்றதனால் ‘இதுவே நமக்கு உஜ்ஜீவம்‘ என்று துணிந்தேன். இனி விஷயாந்தரங்களில் அவகாஹித்துக் கெட்டுப்போக மாட்டேன் என்றாராயிற்று. மலையருவிகள் வெண்ணிறமாகவும் பெருகுவதுண்டு, அங்குள்ள தாதுக்களுடன் கூடிச் செந்நிறமாகவும் பெருகுவதுண்டு, இங்கே ‘அருவிபோல்தார் கிடப்ப‘ என்று பொதுப்படையாகக் கூறியிருப்பதனால் எதையேனுங் கொள்ளலாம். வெண்ணிறமான அருவியென்றால் அப்போது தார் என்றது முக்தாஹாரத்தைச் சொன்னபடியாம், செந்நிறமான அருவியென்றால் மாணிக்கங்களழுத்தின ஹாரத்தைச் சொன்னபடியாம்.

English Translation

Bright rivulets flowing down venkatam make the dark hill look like the radiant sri-graced gem-hued lord senkanmal with strings, of bright pearls over his chest. Attaining his feet, I have learnt to live again.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்