விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முயன்று தொழுநெஞ்சே!*  மூரிநீர் வேலை,*
    இயன்றமரத்துஆல்இலையின் மேலால்,* - பயின்றுஅங்குஓர்
    மண்நலம்கொள் வெள்ளத்து*  மாயக் குழவியாய்,* 
    தண்அலங்கல் மாலையான் தாள்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொள் - அபஹரித்த
வெள்ளத்து - பிரளய வெள்ளத்திலே
ஓர் மாயம் குழவி ஆய் - ஆச்சரியமான ஒரு குழந்தையாய்
தண் அலங்கல் மாலையான் - குளிர்ந்து அசைகின்ற மாலையை யுடையவனான எம்பெருமானுடைய
தான் - திருவடிகளை

விளக்க உரை

ஆலிலையில் துயின்ற பெருமானுடைய திருவடிகளைத் தொழுமாறு தமது திருவுள்ளத்திற்கு உரைக்கிறார். பொய்கையாழ்வார் தமது திருவந்தாதியில் “பாலன் தனதுருவாய் ஏழுல குண்டு, ஆலிலையின் மேலன்று நீ வளர்ந்த மெய்யென்பர் –ஆலன்று வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ? சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு“ என்று –‘பிரளய காலத்தில் உனக்கு இருப்பிடமாயிருந்த ஆலமரம் பிரளய பெருங்கடலிடையே இருந்ததா? விண்ணிலிருந்ததா? மண்ணிலிருந்ததா? எங்கிருந்தது, சொல்லு‘ என்று சமத்காரமாக எம்பெருமானை மடிபிடித்துக் கேள்வி கேட்டார், எம்பெருமான் தனது விசித்ர சக்தி யோகத்தால் அந்த ஆலமரத்தைப் பிரளயக் கடலினிடையே தோன்று வித்தான் என்கிற ஸமாதானத்தை இவ்வாழ்வார் இப்பாட்டில் வெளியிடுவார் போன்று மூரிநீர் வேலையியன்ற மரத்தாலிலையின் மேலால்“ என்கிறார். மூரிநீர் – ‘மூரி‘ என்ற சொல்லுக்கு ‘அநாதி‘ என்ற பொருளும் ‘பெரிது‘ என்ற பொருளும் ‘வலிமைகொண்டது‘ என்ற பொருளும் உண்டு. அம்மூன்று பொருள்களும் இங்குப் பொருந்தும்.

English Translation

He came as a wonder child and swallowed the Universe, then lay sleeping on a fig leaf, floating in the deluge waters. He wears a cool Tulasi garland. Make an effort, O Heart! Worship his feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்