விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நின்ற பெருமானே!*  நீர்ஏற்று,*  உலகுஎல்லாம்
    சென்ற பெருமானே!*  செங்கண்ணா,* - அன்று
    துரகவாய் கீண்ட*  துழாய்முடியாய்,*  நங்கள்
    நரகவாய் கீண்டாயும் நீ. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கீண்ட - கீண்டொழித்தவனே!
துழாய் முடியாய் - திருத்துழாயணிந்த திருமுடியை யுடையவனே!
நங்கள் - எங்களுடைய
நரகம் வாய் - நரகமார்க்கத்தை
கீண்டாயும் நீ - அழித்தவனும் நீயேயன்றோ?

விளக்க உரை

வாமனனாகி மாவலிபக்கல் யாசகனாயச் சென்று இரந்து உதகதானம்பெற்று நின்றபோதையழகை என்சொல்வேன், உடனே திரிவிக்ரமனாய் ஓங்கிவளர்ந்து உலகெல்லாம் வியாவித்த விதத்தை என்செல்வேன், ஆச்ரிதபக்ஷபாதம் நன்கு விளங்கும்படி திருக்கண்ணழகு இருக்குமாற்றை என்சொல்வேன், கம்ஸனாலேவப்பட்டு உன்னைக்கொல்லவந்த கேசியென்னும் குதிரையுருக்கொண்ட வசுரனுடைய வாயைப்பிளந்து அவனை முடிந்த வீரத்தை என்சொல்வேன், அவ்வசுரனோடு போர் செய்தவளவிலும் திருமுடியிலணிந்திருந்த திருத்துழாய் சிறிதும் வாடாதிருந்த விசித்திரத்தை என்சொல்வேன்! எங்களுடைய நரகத்தின் வாயைக் கிழித்தவுனக்கு ஒரு கேசியின் வாயைக்கிழித்தது ஆச்சரியமோ? என்றவாறு. துரகம் –வடசொல், விரைவாகச்செல்வது என்று குதிரைக்குக் காணப்பெயர். நரகவாய் கிண்டாய் – இனி நாங்கள் ஸம்ஸாரமாகிற நரகத்தில் புகுவதற்கு வழியில்லாதபடி செய்தருளினாயென்கை.

English Translation

O Lord who stood and took the Earth! O Lord who measured the worlds! O Lord with lotus eyes and Tulasi wreath! Then in the yore your destroyed the horse kesin's jaws. Now you have destroyed the jaws of hell!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்