விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உலகமும்*  ஊழியும் ஆழியும்,* ஒண்கேழ்
    அலர்கதிரும்*  செந்தீயும் ஆவான்,* - பலகதிர்கள்
    பாரித்த*  பைம்பொன் முடியான் அடிஇணைக்கே,*
    பூரித்துஎன் நெஞ்சே புரி.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகமும் - உலகங்களும்
ஊழியும் - ஸம்ஹாரகாலமும்
ஆழியும் - கடல்களும்
ஒண் கேழ் அவர் கதிரும் - அழகிய நிறத்தையும் பரம்பின கிரணங்களையுமுடைய சந்திர ஸூர்கயர்களும்
செம் தீயும் - சிவந்த நிறத்தை யுடைத்தான் அக்நியும்

விளக்க உரை

இப்போது காணப்படுகின்ற லோகங்களும், இவையெல்லாம் ஸம்ஹரிக்கப்பட்டுக் காலமொன்று மாத்திரம் மிருந்திருக்கப்பெற்ற பிரளயகாலமும், ஆதித்யனும் அக்நியும் ஆகிய பதார்த்தங்களை ப்ரகாரமாகவுடையனாய் (இவற்றுக்கெல்லாம் ஆத்மாவாய்) பரமபதத்திலே பல கிரணங்களை வெளியிடுகின்ற திருவபிஷேகத்தையுடையனாய்க் கொண்டு எழுந்தருளியிருக்கு மெம்பெருமானுடைய திருவடிகளிலே பரிபூரணமான பக்தியைக் கொண்டிருக்குமாறு நெஞ்சுக்கு உபதேசித்தாராயிற்று.

English Translation

The deluge, the creation, the oceans, the radiant sun, the fire, -all these are the Lord. The wears a golden crown set with gems of many hues. O Heart! worship with love the feet of the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்