விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச்*  சோலைத் தடம் கொண்டு புக்கு* 
    முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை*  மூவேழு சென்றபின் வந்தாய்*
    ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்*  உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்* 
    அத்தா உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தொத்து ஆர் - கொத்தாய்ச் சேர்ந்திருந்துள்ள;
பூ - புஷ்பங்கள் அணியப்பெற்ற;
குழல் - கூந்தலையுடைய;
கன்னி ஒருத்தியை - ஒரு கன்னிகையை;
தடஞ்சோலை - விசாலமானதொரு சோலையிலே;

விளக்க உரை

சோலைத்தடம்’ என்றவிடத்து ‘தடம்’ என்ற சொல் தடம் என்ற வடசொல்லின் விகாரமாய் ‘சோலைத்தடம்’ என்பதற்குச் சோலைப் பிராந்தங்களிலே என்று பொருள்கொள்ளவுங் கூடும். [ஒத்தார்க்கு இத்யாதி.] (ஒத்தார்க்கு என்றது ஒத்தார் என்றபடி; ஆறனுருபுக்குப் பொருளில்லை; வழக்கு பற்றி வந்த வழுவமைதி.) உன்மேல் பழிசொல்ல நினைத்தவர்கள் நீ செய்யாதவற்றையுஞ் சில சேர்த்துக்கொண்டு தாங்கள் நினைத்தபடி சொல்லத் தடையில்லை யென்றவாறு. உரப்புதல்-வாயால் அதட்டுதல்; “ஊனமுடையன செய்யப்பெறா யென்றிரப்ப நுரப்பகில்லேன்”” என்றார் திருமங்கை யாழ்வாரும்.

English Translation

You took a flower-coiffured maiden into the deep forest, embraced her pearly breasts and came back after the third watch of the night. People speak ill of you. Alas, I am unable to scold you. My Lord, I know you now, I fear to give you suck.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்