விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கதவி கதம் சிறந்த*  கஞ்சனை முன் காய்ந்து,* 
    அதவி போர் யானை ஒசித்து,*  - பதவியாய்ப்-
    பாணியால் நீர் ஏற்று*  பண்டு ஒருகால் மாவலியை,*
    மாணியாய்க் கொண்டிலையே மண்.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன் – முற்காலத்தில்
கதம் சிறந்த – கோபம் மிகுந்த
கஞ்சனை – கம்ஸனை
கதவி காய்ந்து – கோபித்து முடித்து
போர் யானை – போர் செய்வதாக எதிர்த்துவந்த குவலயாபீடமென்னும் யானையை

விளக்க உரை

எம்பெருமானே! நீ ஆச்ரிதர்களுக்குக் காரியஞ்செய்வதென்று மனம்வைத்துவிட்டால் அருமையான காரியங்களையும் எளிதாகச்செய்து முடிப்பவன்ன்றோ என்னவேண்டி, அடியவர்க்காச்செய்த சில காரியங்களை எடுத்துரைக்கின்றாரிதில். 1. “சாதுசனத்தை நலியுங்கஞ்சன்“ என்கிறபடியே பாகவதர்களுக்கெல்லாம் கொடுமையியற்று மவனாயிருந்த கம்ஸனைச் சீறிமுடித்தாய், பாகவதற்களுக்கு உயிரான உன்னைக் கொல்லுமாறு அக்கஞ்சனால் ஏவிநிறுத்தப்பட்டிருந்த மதயானையை முடித்தாய், இந்திரனுக்கா மாவலிபக்கல் மூவடிமண் நீரேற்றுப்பெற்று மூவுலகங்களையும் அடிப்படுத்தி வாழ்வித்தாய். ஆக இப்படிப்பட்ட காரியங்கள் செய்தவனல்லையோ நீ. அதவுதல் – ஹதம்பண்ணுதல். “அதவிப் போர்யானையொசித்து“ என்பதே வியாக்கியானத்துக்கிணங்கிய ஆன்றோர் பாடம், “உதவிப் போர்யானை“ என்றும் சிலர் ஓதுவர்களாம், இப்பாடம் மோனையின்பத்துக்குச் சேர்ந்திருக்கு மென்னலாமாயினும் முன்னோர் விரும்பியபாடமன்று கம்ஸனுக்கு உதவியாயிருந்த யானையை ஒசித்து என்று பொருள் கூறலாம். பதவியாய் –“***“ என்னும் வடசொல்லாகக்கொண்டு ‘வழியாகவே‘ என்று பொரு கொள்வதம் தகும். பாணி –வடசொல்.

English Translation

I know you, -was it not you who came as a manikin and begged for land, than measured the Earth with your feet? Did you not kill the rutted elephant with his own tusk and the wicked kamsa with his own anger? -O Lord!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்