விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு*  தயிரும் விழுங்கி* 
    கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த*  கலத்தொடு சாய்த்துப் பருகி*
    மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல*  விம்மி விம்மி அழுகின்ற* 
    அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முப்போதும் - மூன்று சந்திப்போதுகளிலும்;
கடைந்து - (இடையரால்) கடையப்பட்டு;
ஈண்டிய - திரண்ட;
வெண்ணெயினோடு - வெண்ணையையும்;
தயிரும் - தயிரையும்;

விளக்க உரை

இந்த இடைச்சேரியிலோ காலை உச்சி அந்தியென்கின்ற மூன்று காலங்களிலும் பசுக்கள் கறக்கின்றன; இம்மூன்று காலங்களிலும் தயிர் கடைந்து வெண்ணெயெடுக்கிறார்கள். அப்படிக் கடைந்தெடுத்த வென்ணையையும் தயிரையும், இடையர்கள் காவடியிலே தம் தோளினால் சுமந்துகொண்டு வந்த பால்களையும் மிச்சமில்லாதபடி நீ குழந்தையாக இருக்கிற இப்பருவத்திலேயே உண்டு விடுகிறாய்; அப்படியுண்டும், முலைப்பாலையே தங்களுக்குத் தாரகமாகக் கொண்டு உண்டு அம்முலைப்பால் பெறாதபோது அழுகிற பிள்ளைகளைப் போலே என்னுடைய முலைப்பாலையுண்டதற்குப் பொருமிப் பொருமி அழவும் அழுகிறாய்; இப்படி அதிமாநுஷச் செயல்களையுடைய பெரியோனே! நீ மனிதனல்லையென்று நான் உணர்ந்து கொண்டேன்; ஆகவே உனக்கு அம்மந்தர அஞ்சுவேன் என்கிறாள். நீ என்பது வார்த்தைப்பாடு; அதற்கு இங்கு பொருளில்லை. முப்போது-காலை உச்சி அந்தியாகிற மூன்றுகாலம்.-மெய் என்று உடம்பாய் இலக்கணையால் முலையைக் குறித்தது. உலகத்தில் முலைப்பாலையே உண்டு வளர்கின்ற பிள்ளைகள் முலைப்பால் பெறாதபோது பசியின் மிகுதியால் அழுமா போலே இக்கண்ணபிரானும் “நமக்குப் பசியுள்ளமையைக் காட்டாவிடில் நம் தாய் ‘இவன் எங்கேனும் களவு கண்டு உண்டிருக்கக்கூடும்’ என்று ஐயப்பட்டு நம்மைத் தண்டிக்க ஒருப்படுவள்” என்று நினைத்து (ப் பசியுள்ளவன் போல) அழுகின்றமை மூன்றாமடியில் விளங்கும். கொணர்ந்த-பலவின்பால் வினையாலணையும் பெயர்; பெயரெச்சமன்று.

English Translation

You gobble up the curds and butter churned all day long, then drink up the milk straight from the canister, brought on a yoke by the cowherds, then also drink breast-milk and cry for more like a wailing babe. My Master! I know you now, I fear to give you suck.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்