விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நவின்று உரைத்த நாவலர்கள்*  நாள் மலர் கொண்டு,*  ஆங்கே-
    பயின்றதனால் பெற்ற பயன் என்கொல்,*  - பயின்றார் தம்-
    மெய்த் தவத்தால்*  காண்பு அரிய மேக மணி வண்ணனை,*  யான்-
    எத் தவத்தால் காண்பன்கொல் இன்று?        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நவின்று உரைத்த – (அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற
நாவலர்கள் – கவிகள்
நாள் மலர் கொண்டு – அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
ஆங்கே பயின்று – அந்த ஸர்வேச்வரனிடத்தில் நெருங்கி யாச்ரயித்து
அதனால் பெற்ற பயன் என்சொல் – அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜ நம் என்னோ

விளக்க உரை

எம்பெருமானைக் காணவேணுமென்று சிலர் ஸாதநாநுஷ்டாநம் பண்ணுவதுண்டு, எம்பெருமான் தானே சிலர்க்குக் காட்சி தந்தருளவேணுமென்று பாரிப்பதுண்டு, இவற்றுள், பரகதஸ்வீகாரமெனப்படுகிற எம்பெருமான் தானே பற்றும் பற்று பலிக்குமேயன்றி, சேதநர் பண்ணுகிற ஸாதநாநுஷ்டாநம் பலிக்கமாட்டாது என்கிறாரிதில். எம்பெருமான் தானே தனது நிரஹேதுகிருபையினாலே தன்படிகளையெல்லாம் எனக்குக்காட்டி யருள நான் காணப்பெற்றேன், வேறு எந்த ஸாதநாநுஷ்டாநம் பண்ணியும் நான் காணப்பெற்றேனல்லேன், ஆகையாலே, ஸாதநாநுஷ்டாநம்பண்ணிக் காண்கிறவர்கள் என்னோடு ஓப்பர்களோ? என்கை. நாம் ஒரு உபாயத்தை அநுஷ்டித்தே எம்பெருமானைப் பெறவேணுமென்கிற எண்ணத்துடன் திருநாமங்களைப் பலகால் ஸந்கீர்த்தனம் பண்ணியும் புஷ்பம் முதலியவற்றைப் பலகால் கொண்டு ஆராதித்தும் ஆகவிப்படி செய்யும் உபாயாநுஷ்டாநங்கள் பயனற்றவை என்பன-முன்னடிகள்.

English Translation

Learned praise-singers offer worship with flowers and receive the grace of the cloud-hued gem Lord, while those who perform penances find it difficult to see him. By what penance shall I see him now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்